Jul 1, 2014

கலப்படம் எதிரொலி ஜவ்வரிசி ஆலைகளுக்கு கெமிக்கல் சப்ளை கிடையாது விற்பனையாளர்கள் ஒப்புதல்


சேலம், ஜூலை 1:
ஜவ்வரிசி தயாரிப்பில் கலப்படத்தை தடுக்க ஜவ்வரிசி ஆலைகளுக்கு ஆசிட், கெமிக்கலை இனி சப்ளை செய்யமாட்டோம் என்று உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி முன்னிலையில் சேலம் மாவட்ட ஆசிட் மற்றும் கெமிக்கல் விற்பனையாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஜவ்வரிசி தயாரிப்பில் மரவள்ளிக்கிழங்கு மாவில் மக்காச்சோள மாவை ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கலப்படம் செய்து தயாரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முன்னிலையில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், ஜவ்வரிசி விற்பனையாளர்கள் கலந்து கொண்ட முத்தரப்பு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் எடுத்துரைத்தனர். அக்கூட்டத்தில் ஜவ்வரிசி தயாரிப்பில் இனி மக்காச்சோளம் கலக்கக்கூடாது என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜவ்வரிசியில் கலப்படம் செய்த இரு ஆலைகளுக்கு உணவுபாதுகாப்பு துறை அதிகாரி சீல் வைத்தார்.
இதையடுத்து கடந்த 23ம் தேதி சீல் வைத்த ஆலையை திறக்கக்கோரி உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவை ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் ஜவ்வரிசி தயாரிப்பில் இனி கலப்படம் செய்யமாட்டோம் என்று அதிகாரிடம் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து நேற்று சேலம் மாவட்ட ஆசிட் மற்றும் கெமிக்கல் விற்பனையாளர்களுடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தினர்.
அந்த கூட்டத்தில் ஆசிட் மற்றும் கெமிக்கல் விற்பனையாளர்களிடம் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி ஜவ் வரிசி தயாரிப்பில் கெமிக்கல் மற்றும் ஆசிட் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறினார். இதைக்கேட்ட கெமிக்கல் விற்பனையாளர்கள், ‘இனி ஜவ்வரிசி ஆலைகளுக்கு ஆசிட், கெமிக்கலை சப்ளை செய்யமாட்டோம்’ என்று ஒப்புதல் அளித்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது:
தமிழக அரசு கடந்த மார்ச் 21ம் தேதி ஓர் அர சாணையை வெளியிட்டது. அதில் 19 வகையான கெமிக் கல் மற்றும் ஆசிட் விற்கும் விற்பனையாளர்கள், யாருக்கு ஆசிட் மற்றும் கெமிக்கல் விற்கப்படுகிறது என்றும், எந்த உபயோகத்திற்காக வாங்குகின்றனர் என்று தினசரி பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும் என்றும், ஆசிட் மற்றும் கெமிக்கல் விற்கும் விற்பனையாளர்கள் கட்டா யம் அந்தந்த மாவட்ட வரு வாய் அலுவலரிடம் கட்டா யம் லைசென்ஸ் பெற்று இருக்கவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிட் மற்றும் கெமிக்கல் விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களிடமிருந்து தான் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் ஆசிட், கெமிக்கலை வாங்குகின்றனர். சேலம் மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் ஜவ்வரிசி வெண்மையாக வர சோடியம் ஹைப்போ குளோரைடு, சல்பியூரிக் அமிலம், பாஸ்போரிக் அமிலம், ஹைட்ராஜன் பெராக்சைடு கலப்படம் செய்யப்படுகிறது. இந்த 4 ரசாயனங்களும் இனி ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களுக்கு விற்கக்கூடாது என்று ஆசிட் மற்றும் கெமிக்கல் விற்பனையாளர்களிடம் கூறியுள்ளோம்.
அதற்கு ஆசிட் மற்றும் கெமிக்கல் விற்பனையாளர்கள் இனி ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இந்த 4 ரசாயனத்தையும் விற்பனை செய்வதில்லை என்று ஒப் புதல் அளித்துள்ளனர். இதை யும் மீறி ஆலை உரிமையாளர் கள் வெளி மாவட்டங்களில் இருந்து ரசாயனம் வாங்கி ஜவ்வரிசி உற்பத்தி செய்வது தெரிய வந்தால், அந்த ஆலை யை பூட்டி சீல் வைக்கப்படும்.
இவ்வாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக் டர் அனுராதா கூறினார்.

No comments:

Post a Comment