கடலூர், ஜூலை 7:
கடலூர் நகரில் 100க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகள் உள்ளன. அவை சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், நோயுற்ற இறந்த கோழிகள் இறைச்சியாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு வந்தன.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், நல்லதம்பி, சுப்ரமணியம், ரவிச்சந்திரன் ஆகியோர் கடலூர் மஞ்சக்குப்பம் புதுக்குப்பம் பகுதிகளில் உள்ள கோழி இறைச்சி கடைகளிலும், பன்றி இறைச்சி விற்பனை கூடத்திலும் ஆய்வு நடத்தினார்கள்.
கோழி இறைச்சி கூடம் சுகாதாரமற்ற முறையில் இருந்தது. மேலிருந்து கீழாய் சரிவான தளத்தில் இறைச்சி வெட்டப்பட்டு அதன் கழிவுகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடம் ஈக்கள் மற்றும் வாடையின்றி வைத்துக்கொள்ளுமாறும், நோயுற்ற இறந்த கோழிகளை இறைச்சியாக பயன்படுத்தக்கூடாது எனவும் அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment