நாகை அடுத்த, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டு திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் முனுசாமி தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், கலெக்டர் முனுசாமி பேசியதாவது: இந்தாண்டு, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை சிறப்பாக நடத்த, கடந்த ஆண்டை விட, அடிப்படை வசதிகள் கூடுதலாக இருக்க வேண்டும். இதற்காக, 750 நபர்கள் சுகாதாரப் பணிகளில் ஈடுபட உள்ளனர். 50 டாக்டர்கள், 50 நர்சுகள் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு, சுழற்சி முறையில், 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
திருவிழாவையொட்டி வேளாங்கண்ணி மற்றும் நாகை பகுதியில் உள்ள ஓட்டல்களில், தரமான உணவு வழங்கப்படுகிறதா என, சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். தரமில்லாத உணவு பொருட்கள் வழங்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.வேளாங்கண்ணியில் திருவிழா நடைபெறும்
நாட்களில், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.பணிகளை கண்காணிக்க, துணை ஆட்சியர் நிலையில் குழு அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment