Jun 5, 2014

தாம்பரம், வேளச்சேரியில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்ற 7 பேர் கைது

தாம்பரம், ஜூன் 5:
மத்திய, மாநில அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரங்கிமலை மாவட்ட காவல் துணை கமிஷனர் சரவணனுக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில் எஸ்ஐ மோகன் தலைமையில் தனிப்படையினர் தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஒரு குடோன் மற்றும் சில கடைகளில் நேற்று சோதனையிட்டனர்.
அங்கு ஹான்ஸ், குட்கா, பான்மசாலா, மாவா, சூப்பர் பாக், பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.7.5 லட்சம் என கூறப்படுகிறது. மேலும், ரூ.1.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகர் பாபு (41), தாம்பரம் மார்க்கெட் பகுதி ரகுநாதன் (47), இப்ராஹிம் (43) ஆகியோரை கைது செய்தனர்.
வேளச்சேரி:
பெசன்ட்நகர் பகுதியில் பான்பராக், குட்கா, மாவா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சாஸ்திரி நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் மாலையில் போலீசார் பஸ் நிலையம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பான்பராக், மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்ற பெசன்ட்நகரை சேர்ந்த ஜெயராமன் (74), மாண்டு (23), ஆனந்த் (26), சரவணமூர்த்தி (66) ஆகியோரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment