கம்பம், ஜூன் 12:
கம்பத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு தீ வைத்து அழிக்கப்பட்டது.
தேனி மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சோமசுந்தரம் உத்தரவின்படி கம்பம் பகுதியில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஜனகர் ஜோதிநாதன், மதன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், சரவணன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
கம்பம் மெயின்ரோடு, சிக்னல், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை பாக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள், பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாக்குகள் விற்பனை செய்ததாக ரூ.2200 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் போதை பாக்குகள் நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தீ வைத்து அழிக்கப்பட்டது.
No comments:
Post a Comment