நாகை, ஏப்.1:
நாகூர் ஆண்டவர் தர்கா கந்துரி விழாவை முன்னிட்டு உணவு விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நாகூர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்து. கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார், நகராட்சி உணவு பாதுகாப்பு அலு வலர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசும் போது, கந்தூரி விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும், தர மான பாதுகாப்பான உண வை வழங்க தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தனர்.
கூட்டத்தில், ஹோட்டல் கள், தேனீர் கடை உள்ளிட்ட அனைத்து உணவு விற்பனையாளர்களும் தங்கள் கடை யை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண் டும். கைகழுவும் இடத்தில் சோப்பு வைத்திருக்க வேண் டும். கழிவுகள் முறையாக அகற்றப்பட வேண்டும். உணவு கையாள்பவர்கள் தன் சுத்தத்தை பேண வேண் டும். துசி, ஒட்டடை, பூச்சி கள் உண வை தொட அனுமதிக்க கூடாது. தரமான மூலப் பொருட்களையே உணவு தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே வழங்க வேண்டும்.
தரமான தேயிலை துளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கேரி பைகளில் டீ பார்சல் வழங்க கூடாது. திறந்த நிலையில் ஈ மற்றும் துசுகள் விழும் வகையில் தயாரிக்கப்பட்ட பூரி, வடை, பஜ்ஜி, சமோசா உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்ய கூடாது. காலாவதியான, தயாரிப்பு விவரம் இல்லாத எந்தவிதஅடைக்கப்பட்ட உணவு பொருட் களையும் விற்பனை செய்ய கூடாது. இறக்குமதியாளர் விவரம் இல்லாத வெளி நாட்டு உணவு பொருட் களையும் யாரும் விற்பனை செய்யக் கூடாது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையி லை பொருட்களை விற் பனை செய்யக்கூடாது.
உணவு எண்ணெய் அல்லாத மற்ற எண்ணை யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை விற்பனை செய்யக்கூடாது. அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே அன்னதானம் செய்ய வேண்டும். அழுகிய மற்றும் கெட்டுப்போன மீன், கோழி, ஆடு, மாடு இறைச்சிகள் மற்றும காய் கறி விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தினர்.
No comments:
Post a Comment