Mar 14, 2014

புளியந்தோப்பில் குட்கா, ஆட்டோவுடன் பறிமுதல்

பெரம்பூர், மார்ச் 14: 
புளியந்தோப்பு நாச்சாரம்மன் தெருவில் உள்ள ஒரு குடோனில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், நேற்று மதியம் அங்கு சோதனையிட்ட போது, சரக்கு ஆட்டோ ஒன்றில் நிறைய மூட்டைகளைள ஏற்றிக் கொண்டிருந்தனர். 
இதுகுறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டபோது, தாம்பூலத்தில் வைக்கும் பாக்கு என கூறினர். ஒரு மூட்டையை பிரித்து பார்த்தபோது, குட்கா பாக்கு இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அந்த குடோனில் இருந்த 64 மூட்டைகளில் வைக்கப்பட்டு இருந்த குட்கா, ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 6.5 லட்சம். 
இதுதொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த செந்தில் (37), தாஸ் (47), சிவகுமார் (32) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் சசிகுமாரை தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment