சென்னை: 'பொதுப்பணித் துறையில் தடையின்மை சான்று பெற்ற, தனியார் குடிநீர் நிறுவனங்கள் செயல்படலாம்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் விற்பனைக்கு அனுப்பும், 'கேன்' குடிநீரின் தரம் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இதில், உரிய அனுமதி பெறாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலத்தடிநீர் எடுக்க, பொதுப்பணித் துறையின் தடையின்மைச் சான்று பெறாத, 252 நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. தடையின்மை சான்று பெற, கால அவகாசம் தரப்பட்டது. பெரும்பாலான நிறுவனங்கள், பொதுப்பணித் துறையின் தடையின்மை சான்று பெற்றன. நேற்று நடந்த விசாரணையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'பொதுப்பணித் துறை சான்று பெற்ற குடிநீர் நிறுவனங்கள் செயல்படலாம்' என, தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் சொக்கலிங்கம், உறுப்பினர் நாகேந்திரன் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment