சென்னை, மார்ச் 12:
குடோனில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கொருக்குப்பேட்டை தியாகப்ப செட்டி தெருவில் உள்ள ஒரு குடோனில், தடை செய்யப்பட்ட பான்பராக், ஹன்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக ஆர்கே நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு, மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பது தெரிந்தது. அங்கிருந்த 50 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, செந்தில் (35) என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment