தண்டையார்பேட்டை, மார்ச் 31:
சவுகார்பேட்டையில், குடோனில் பதுக்கி வைத்தி ருந்த 3 லட்சம் குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சவுகார்பேட்டையில் உள்ள சில குடோன்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்வ தாக, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகா ரிகளுக்கு தகவல் கிடைத் தது.
அதன்பேரில், அலுவ லர் லட்சுமி நாராயணன் தலைமையில், ஆய்வாளர் கள் இளங்கோ, சிவசங்கரன், சதாசிவம் ஆகியோர் நேற்று முன்தினம் அப் பகுதியில் உள்ள குடோன் களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு குடோனில் 580 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 3 லட்சம் என கூறப்படுகிறது. இதுதொடர் பாக, குடோனில் இருந்த ஆறுமுகம் (35), ரியாஸ் (32) ஆகியோரை கைது செய்து, குட்கா பொருட்கள் எங்கிருந்து வந்தது. குடோன் உரிமையாளர் யார், எங்கெங்கு சப்ளை செய்யப்படுகிறது என தீவிரமாக விசாரிக்கின் றனர்.
No comments:
Post a Comment