Feb 16, 2014

உணவுத்துறை அதிகாரி அதிரடி ஆய்வு பிரபல நிறுவன பாக்கெட் பேரிச்சம் பழத்தில் புழுக்கள்

சென்னை, பிப். 15: 
குரோம்பேட்டை லட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வம் (38). இவர், நேற்று முன்தினம் அதே தெருவில் உள்ள ஒரு கடையில், பிரபல நிறுவனத்தின் பாக்கெட் பேரிச்சம் பழம் வாங்கினார். அதை வீட்டுக்கு கொண்டு சென்று பிரித்து பார்த்தபோது, அதில் புழுக்கள் இருந்ததை கண்டு, செல்வம் அதிர்ச்சியடைந்தார். 
உடனே அந்த கடைக்கு சென்று புகார் கூறினார். ஆனால் கடைக்காரர் இதனை அலட்சியம் செய்ததுடன், வாங்கிய பொருட்களுக்கான பில் வழங்கவில்லை. இதுகுறித்து, பல்லாவரம் உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு துறை அலுவலர் வேலவனிடம் புகார் செல்வம் செய்தார். 
இதையடுத்து, அதகாரி வேலவன் தலைமையில், உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று சம்பந்தப்பட்ட கடைக்கு சென்றனர். 
அங்கிருந்த பொருட் களை அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கடையில் இருந்த பேரிச்சை பழம் பாக்கெட்டை பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பினர். 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. பூச்சி தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை உற்பத்தியாளரிடமும் விற்பனையாளரிடமும் இல்லை.
    வாடிக்கையாளர் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete