விழுப்புரம், பிப். 11:
கடலூர் மாவட்டம் நெய்வேலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளிர்பானம் குடித்த சிறுமி திடீரென இறந்தார். இந்த சம்பவம் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள குளிர்பான கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், சூப்பர் மார்க்கெட்டு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடை உரிமையாளர்களிடம் காலாவதியான குளிர் பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீறினால் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரித்தனர். அப்போது அதிகாரிகள் கூறும்போது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குளிர்பான கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை 500க்கும் மேற்பட்ட காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலாவதியான குளிர்பானங்களை விற்றால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்படுகிறதா என உணவு பாதுகாப்புஅதிகாரிகள் சோதனை நடத்தினர்.
No comments:
Post a Comment