பரமக்குடி, ஜன. 6:
பரமக்குடி நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் வழங்கப்படும் குடிநீர் மற்றும் உணவில் சுகாதாரகேடு ஏற்பட்டு இருப்பதாகவும், அதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள் ளன.
பரமக்குடி நகரில் பெரிய ஹோட்டல்கள், சிறிய ஹோட்டல்கள் என மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட சாலையோர உணவு கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஹோட்டல்களுக்கு பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வருபவர்களும், பரமக்குடியை சுற்றியுள்ள கிராம மக்களும் செல்கின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளும் பரமக்குடி ஹோட்டல்களுக்கு சாப்பிட வருகின்றனர்.
பெரும்பாலான ஹோட்டல்களில் சாப்பிட வருபவர்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் குடிக்க முடியாத அளவு உப்பு தன்மை கொண்டதாக உள்ளது. உணவு வகைகளும் தரமற்று இருப்பதாகவும் விலை கூடுதலாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் சாலையோரம் உள்ள சில ஹோட்டல்களில் சுத்தம் செய்யப்படாத மேஜை, கழுவப்படாத டம்ளர், து�சி கலந்த குடிநீர் வழங்கப்படுவதாகவும், அரசு தடை செய்துள்ள பிளாஷ்டிக் பேப்பரில் உணவு பறிமாறப்படுவதாகவும் கூறப்படு கிறது.
இவற்றை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது இந்த ஹோட்டல்களுக்கு சென்று பரிசோதனை நடத்துகின்றனர். அப்போது சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி சிறிய தொகையை அபராதமாக விதிக்கின்றனர். அந்த தொகையை செலுத்திவிட்டு மீண்டும் ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு செயல்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுகுறித்து சரவணன் கூறியதாவது: “குறிப்பிட்ட சில ஹோட்டல்களை தவிர மற்ற அனைத்து ஹோட்டல்களிலும் குடிநீர் மற்றும் உணவில் சுகாதார சீர்கேடு உள்ளது. சாலையோர கடைகளில் சுகாதாரம் என்பது முழுமையாக கிடையாது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஹோட்டல்களில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment