Jan 4, 2014

கம்பம் நகராட்சி பகுதிகளில் மாட்டு இறைச்சி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை கட்டுப்பாடு

கம்பம், ஜன. 4: 
கம்பம் நகராட்சி பகுதியில் மாட்டு இறைச்சி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் 18 வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 
தேனி மாவட்டம் கம் பம் நகரில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மாட்டு இறைச்சி விற்பனை செய் யும் கடைகள் உள்ளன. மாட்டு இறைச்சி கடைக ளில் சுகாதாரமற்ற முறை யில் இறைச்சி விற்பதாகவும் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், நகராட்சி சுகாதாரத்துறையினர், கால் நடை மருத்துவர்கள், மாட்டு இறைச்சி விற்பனை வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்தில் ஆணை யாளர்(பொ) அய்யனார் பேசியதாவது: இறைச்சி விற்பனை செய்ய பல்வேறு விதமான விதிமுறைகள் உள்ளன. இறைச்சிக்காக மாடுகளை அறுக்கும்போது 24 மணி நேரத்திற்கு முன்னதாக கால்நடை மருத்துவர் குழுவினர்களிடம் சான்றிதழ் பெற்ற பின்னரே அறுத்து விற்பனை செய்ய வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறாகவும், தொற்று நோய் பரப்பும் வகையில் உள்ள இடங்களிலும் அறுப்பதும், விற்பனை செய்யவும் கூடாது என்று கூறி னார். 
இதுகுறித்து இறைச்சி வியாபாரிகள் கூறுகையில், ‘அனைத்து வியாபாரிகளும் குறிப்பிட்ட ஒரே இடத்தில் வைத்து விதிமுறைகளை மீறாமல் மாடுகளை அறுத்து கொள்கிறோம். உணவு பாதுகாப்பு துறை யினர் மற்றும் நகராட்சி சுகாதாரத்துறையினரின் நடைமுறைகளை கடைபிடிக்கிறோம்’ என்றனர். கூட்டதில் கால்நடை மருத்துவர் காமேஷ்கண்ணன், துப்புரவு அலுவலர் அரசகுமார், உணவுபாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதிநாதன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

No comments:

Post a Comment