Jan 22, 2014

காலாவதியான குளிர்பான விற்பனை தடுக்க வேண்டும்


கரூர், ஜன.22:
காலாவதியான குளிர்பானங்கள் விற்பனையை தடுக்க பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். 
கரூர் பகுதியில் இரவு மற்றும் அதிகாலை வேளை களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. ஆனாலும் பகலில் அனல் பறக்கும் வெயில் கொளுத்துகிறது. கோடைகாலம் போல வெப்பமாக இருப்பதால் வெயிலின் தாக் கத்தை சமாளிப்பதற்காக மக்கள் குளிர்பானங்களை வாங்கி பருகுகின்றனர். 
கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பான வகைகளில் காலாவதியானவைகளும் விற்பனை செய்யப்படுகிறது. குளிர்பான பாட்டலில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பல கடைகளில் காலாவதி தேதி முடிந்த பின்னரும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் மோர், ரஸ்னா, லெமன் ஜூஸ் போன்றவையும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலான பாக்கெட்டுகளில் எந்த கம்பெனி என தெரி யாத அளவுக்கு உள்ளது. ஏதோ ஒருபெயரில் இந்த பாக்கெட்டுகளை விற்பனை செய்கின்றனர். 
கரூரை சேர்ந்த சக்தி வேல் என்பவர் கூறுகையில், வெயிலின் வெப்பத்தை சமாளிப்பதற்காக பாட்டலிலும், பாக்கெட்டுகளிலும் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களை மக்கள் அதிக அளவில் வாங்கி குடிக்கின்றனர், ஆனால் இவை முறையான தயாரிப்பு இல்லாமல் இருக்கிறது. காலாவதி தேதி முடிந்த பின்னரும் விற் பனை செய்கின்றனர். கிராம மக்களுக்கு இதுபற்றி தெரியாது என்பதால் அவர்கள் வாங்கி குடிக்கின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அடிக்கடி கடை களில் ஆய்வு நடத்தி காலாவதியான குளிர்பானங் களை பறிமுதல் செய்து அழிக்கவேண்டும். முன்பெல்லாம் அடிக்கடி இது போன்ற ஆய்வுகளை நடத் தும் அதிகாரிகள் தற்போது அதுபோன்ற சோதனைகள் எதையும் மேற்கொள்ளா மல் இருக்கின்றனர் என்றார். 
குளிர்பானத்திற்கு அடுத்தபடியாக, குடிநீர்பாட்டல்கள், குடிநீர் பாக்கெட்டுகள், கேன்கள் அதிக அளவில் விற்பனையாகிறது. இவைகளிலும் தயாரிப்பு மற்றும் காலவதி தேதி இருப்பதில்லை. பழைய ஸ்டிக்கர் ஒட்டப் பட்டு அதேகேன் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது. கடைகளில் புதிதுபுதிதாக பல பெயர்களில் குடிநீர் பாட்டல்கள் விற் பனை செய்யப்படுகிறது. மக்கள் கூடும் இடங்களில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் குடிநீர் பாக்கெட்டுகளை விநி யோகம் செய்கின்றனர். குடிநீர்பாக்கெட்டுகள் மூட்டைகளில் அடைக்கப்பட்டு கொண்டு வந்து கொடுக்கப்படுகிறது. இதேபோன்று கடைகளிலும் குடிநீர் மூட்டைகளில் இருந்து பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. சில கடை களில் இந்த குடிநீர் பாக்கெட்டுகளை பிரிட்ஜ்ல் வைத்து குளிர்வித்து விற்பனை செய்கின்றனர். 


டாஸ்டாக் கடைகளில் உள்ள பார்களிலும் இதே போன்று குடிநீர் பாக்கெட்டுகள் பாட்டல்கள் விற் பனை செய்கின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள், நகராட்சி சுகாதார அலுவலர்கள் இதுகுறித்து ஆய்வு நடத்தி காலாவதியான குடிநீர் பாட்டல்கள், பாக்கெட்டுகளை விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment