கடலூர், ஜன.13-
வடலூரில் வரும் 17-ந் தேதி தைப்பூச விழா நடைபெறுகிறது. இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தைப்பூச விழா அன்னதானம்
அன்னதானம் கொடுக்க விரும்பும் பக்தர்கள் அதற்கான உணவு பாதுகாப்பு அலுவலரிடம் உணவுக்கான தகுதிச் சான்று பெற்று, அன்னதானம் வழங்க காவல் துறையில் பதிவு செய்து, அதற்காக அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதிக்கப்படாத இடத்திலோ அல்லது உணவு பாதுகாப்பு அதிகாரியால் தகுதிச் சான்று பெறாத உணவுப்பொருளையோ அன்னதானம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அன்னதானம் வழங்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 94434 34024. மேலும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடைபாதை கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் வைக்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மேற்கண்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment