சேலம், ஜன.23-சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறுகையில், சேலம் மாவட்டத்தில் சுமார் 28 ஆயிரம் உணவு சார்ந்த கடைகள் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெறுவதற்கு ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்த மாதம் 4-ந் தேதி கடைசி நாளாகும். அதற்குள் உணவகங்கள் மற்றும் உணவு சார்ந்த கடைகளை நடத்தி வரும் நபர்கள் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் உரிமம் பெறாதவர்கள் ரூ. 5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனைக்கு ஆளாவார்கள். சேலம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 16 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளார்கள். 3 ஆயிரம் பேர் உரிமம் பெற்றுள்ளனர். எனவே, சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற விரும்புவோர்கள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலரை அணுகலாம், என்றார்.
No comments:
Post a Comment