Dec 3, 2013

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் காலாவதி குளிர்பானம் பறிமுதல் தரையில் கொட்டி அழிப்பு

கிருஷ்ணகிரி, டிச.3:
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்பானத்தை பறிமுதல் செய்து அழித்து உணவு பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை எடுத்தார். 
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரில் நேற்று காலை எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி துவக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகை நிருபர்கள் என ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். 
அப்போது பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு பழ கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்பான பாட்டில்களை சிலர் வாங்கி குடித்துள்ளனர். அதில், ஒரு சிலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பாட்டிலில் தேதியை பார்த்தபோது காலாவதியான குளிர்பானம் என்பது தெரிய வந்தது. 
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கலைவாணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்களை சோதனை செய்தார். அதில் காலாவதியான சுமார் 50க்கும் மேற்பட்ட பாட்டில்களை பறிமுதல் செய்து, தரையில் ஊற்றி அழித்தார். மேலும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழக்கடையில் விற்பனை செய்யப்பட்ட காலாவதி குளிர்பானங்களை உணவு மற்றும் மருத்துவத்துறை அலுவலர் டாக்டர்.கலைவாணி பறிமுதல் செய்து அழித்தார

No comments:

Post a Comment