கூடுவாஞ்சேரி, டிச.17 :
கூடுவாஞ்சேரியில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் கலெக்டர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கூடுவாஞ்சேரியில் மளிகை கடை, பெட்டி கடை, பேன்சி ஸ்டோர், பாஸ்ட் புட் கடைகள், ஓட்டல்கள், காய்கறி கடைகள் உள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களில் காலாவதியாகும் தேதி, பொருளின் எடை, விலை போன்ற விவரம் எதுவும் இல்லை. ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
இது மட்டுமின்றி கம்ப்யூட்டர் பில் கொடுப்பது இல்லை. பில் வேண்டும் என்று வாடிக்கையாளர் கேட்டால், சாதாரண பேப்பரில் எழுதி கொடுக்கின்றனர். எந்த பொருளாக இருந்தாலும் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் கடைக்காரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வாய்த் தகராறு ஏற்படுகிறது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், மார்க்கெட்டில் உள்ள கடைகளில் மீன், இறைச்சி, கோழிக்கறி ஆகியவற்றை ஐஸ் பெட்டி யில் வைத்து விற்கின்றனர். இதை வாங்கி பாஸ்புட் கடைகளில் கடலை மாவு கலந்து சிக்கன் ரைஸ், சிக்கன் சிக்ஸ்டி&65 என விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் மார்க்கெட்டில் மீன் வாங்கி, சமைத்து சாப்பிட்டால் விஷத்தன்மை காரணமாக உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மளிகை கடைகளில் ஊறுகாய் உள்ளிட்ட காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உணவு பொருட்கள் தரமானதாக இல்லை. கள்ளச் சந்தையில் பொருட்களை வாங்கி வந்து அப்பாவி மக்களிடம் அநியாய விலைக்கு விற்கின்றனர். எனவே கலெக் டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment