விழுப்புரம்
விழுப்புரத்தில் தடையை மீறி விற்பனை செய்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடையை மீறி பலர் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். விழுப்புரம் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், காணை சமரேசன், முருகன் ஆகியோர் நேற்று விழுப்புரம் பழையபேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடையில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. 8 மூட்டை புகையிலை, 6 மூட்டை பான்மசாலா என ரூ. 1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை கொட்டி அழித்தனர்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரே தடையை மீறி விற்பனை செய்த புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment