சேலம், நவ.13-சேலத்தில் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் திரண்ட வெல்லம் தயாரிப்பாளர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.வெல்லம் தயாரிப்பாளர்கள்சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் கெமிக்கல், சர்க்கரை கலப்படம் செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு செய்து மாதிரிகள் எடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஓமலூர் அருகே உள்ள காம்லாபுரம், கொட்டியாபுரம், நால்கால் குளம், கருப்பூர், திண்ணப்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து வெல்லம் தயாரிப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் சேலத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.பேச்சுவார்த்தை பின்னர் அவர்களுடன் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, வெல்லம் தயாரிப்பாளர்கள், கலர் வெல்லத்திற்கு தான் அதிக விலை கிடைக்கிறது. இதனால் தான் கெமிக்கல் பயன்படுத்தி வருகிறோம் என்று கூறினர்.இதற்கு அதிகாரிகள், வெல்லத்தில் 70 பி.பி.எம் அளவுக்கு மேல் கெமிக்கல் சேர்க்கக்கூடாது என்பது சட்டத்தில் உள்ளது. ஆகையால் அதை மீற கூடாது என்று தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். இதற்கு வெல்லம் தயாரிப்பாளர்கள் கூறும் போது, நாங்கள் கெமிக்கல் பயன்படுத்த மாட்டோம். ரூ.1,200 வரை விற்பனைஆனால் எங்களுக்கு கலர் வெல்லத்தின் விலைக்கே வாங்க வியாபாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வியாபாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதுகுறித்து, வெல்லம் தயாரிப்பாளர்கள் கூறும் போது, ‘வெல்லத்திற்கு மஞ்சள் கலர் கிடைப்பதற்காகவே கெமிக்கலை பயன்படுத்தி வருகிறோம். உற்பத்தி செய்கிற வெல்லத்தை சேலம் மாவட்ட வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் விற்பனை செய்கிறோம்.அங்கு ஒரு மூட்டை (31 கிலோ) கலர் வெல்லம் ரூ.1,200 வரை ஏலம் போகிறது. ஆனால் கலர் இல்லாத வெல்லம் ரூ.900-க்கு தான் ஏலம் போகிறது. எனவே தான் கலர் வெல்லத்தை தயாரிக்கிறோம். மேலும் கலர் வெல்லம் விலைக்கே மற்ற வெல்லத்தை வாங்கினால் கெமிக்கலை பயன்படுத்த மாட்டோம்‘ என்று கூறினர்.
வெல்லம் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோரிக்கை
சேலம்: சேலம், பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில், நேற்று, கரும்பு வெல்லம் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
சேலம் மாவட்ட கரும்பு வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மாதையன் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் காமலாபுரம், தேக்கம்பட்டி, வெள்ளாளப்பட்டி, கருப்பூர், ஒட்டியாபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட கரும்பு வெல்லம் உற்பத்தி செய்வோர் உள்ளனர். சேலம் விவசாய சங்க மார்க்கெட்டில், 30 கிலோ சிப்பம் கொண்ட வெல்லத்துக்கு, 31 கிலோ கொடுக்க வேண்டியுள்ளது.
மேலும், ஒவ்வொரு சிப்பத்துக்கும், 30 முதல், 40 ரூபாய் வரை கழித்து தான் விலை கொடுக்க வேண்டியுள்ளது. கெமிக்கல் கலக்காமல், சுத்தமான வெல்லம் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும், என்று உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள உற்பத்தியாளர்கள், தயாரிக்கும் முறையை தான் நாங்களும் கடைபிடிக்கிறோம். இது தொடர்பான பேச்சுவார்த்தை, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடந்து வருகிறது, என்றார்.

No comments:
Post a Comment