ஊட்டி, நவ.19:
நகராட்சி
பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு
தரமில்லாத, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சுகாதாரமற்று
இயங்கிய பேக்கரியை மூட உத்தரவிட்டனர்.
ஊட்டி
நகராட்சி பகுதி ஏடிசி முதல் மத்திய பஸ் நிலையம் வரையில் சுமார் 60
கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி தலைமையில் ஆய்வாளர்கள்
சிவக்குமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். டீ
கடை, ஓட்டல், பேக்கரி, மளிகை கடை, டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடந்தது.
இதில், சுகாதாரமற்று இயங்கி பேக்கரியை மூட உத்தரவிட்டனர். பின்பு பேக்கரி
முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே திறக்க அனுமதியளித்தனர்.
இந்த
சோதனையில், தரமில்லாமல் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் போன்ற
பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள
கலாவாதியான மசாலா பொருட்கள், உற்சாக பானங்கள், குளிர் பானங்களை பறிமுதல்
செய்து அழித்தனர். இதுதவிர தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல்
செய்னர்.
கலாவாதியான பொருட்கள், கலப்படம்
செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. ஆனால், சிலர் தொடர்ந்து
விற்பனை செய்கின்றனர். சுகாதாரமான உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய
வேண்டும். சில கடைகளில் தொடர்ந்து சுகாதாரமில்லாத உணவு வகை மற்றும்
பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை உட்கொள்ளும் பொதுமக்களுக்கு கொடிய
நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வணிகர்கள் சுகாதாரமான உணவு
பொருட்கள், தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
கடைகள்
மற்றும் ஓட்டல்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
காலாவதியான பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம். தடை செய்யப்பட்ட குட்கா,
புகையிலை தயாரிப்புக்கள் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என உணது பாதுகாப்பு அலுவலர் ரவி தெரிவித்தார்.
No comments:
Post a Comment