Nov 11, 2013

250 கிலோ குட்கா பறிமுதல்


சென்னை, நவ. 11:
வடசென்னை பகுதியில் அதிகாரிகள் நடத்திய மாவா, ஹான்ஸ், பான்பராக், குட்கா போன்ற மெல்லும் புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் சிலர் அதை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உணவு பொருள் பாதுகாப்பு ஆய்வாளர்கள் இளங்கோவன், சிவசங்கரன், ஜெயகோபால் ஆகியோர் கடந்த 2 நாட்களாக வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. 250 கிலோ குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment