மேட்டூர், அக்.4:
பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. சோதனைச்சாவடிகளில் லாரிகளை சோதனையிடாமல் அதிகாரிகள் பாராமுத்துடன் நடந்து கொள்வதாக போலீசார் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இந்தியா முழுவதும் குட்கா, ஜர்தா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவை ரயில்கள், ஆம்னி பேருந்துகள் மூலம் பெங்களூருககு வருகிறது. அங்கிருந்து லாரிகள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுககும் சப்ளை செய்யப்படுகிறது.
பெங்களூரிலிருந்து லாரிகளில் புகையிலை பொருட்கள் கொண்டு வரும்போது கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் லாரிககு முன்பாக காரில் வந்து சோதனைச்சாவடி அதிகாரிகளை நன்கு கவனித்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது.
இதனால், புகையிலை பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் எவ்வித ஆவணங்களும் இன்றி வழியனுப்பப்படுகின்றன. ஓசூர் மற்றும் தொப்பூர் சோதனைச்சாவடிகளை நாள்தோறும் ஏராளமான புகையிலை கடத்தல் லாரிகள் கடந்து செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரகசிய தகவலின்படி சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், மேச்சேரி போலீசாரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சைகை செய்தும் நிற்காமல் சென்ற இரண்டு லாரிகளை சினிமா பாணியில் விரட்டிச் சென்று போலீசார் மடக்கினர். அவற்றில் 16.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது. தொப்பூர் சோதனைச் சாவடியை தாண்டி புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவது போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
No comments:
Post a Comment