Oct 18, 2013

சேலம் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையொட்டி உரிமம் இல்லாமல் இனிப்பு, காரம் விற்றால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை


சேலம்,
தீபாவளி பண்டிகையொட்டி சேலம் மாவட்டத்தில், உரிமம் இல்லாமல் இனிப்பு, காரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை
இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:–
தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகை நாட்களில் சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பலகார சீட்டுகள் என்று நடத்தி மக்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூல் செய்யப்படும்.
பின்னர் அவர்களுக்கு இனிப்பு, கார வகைகள் செய்து விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்த இனிப்பு, கார வகைகளை வீட்டிலோ அல்லது திருமண மண்டபத்திலோ வைத்து மொத்தமாக தயார் செய்து கொடுக்கின்றனர்.
நடவடிக்கை
அப்படி செய்யப்படும் பண்டங்கள் தரமானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் இருக்க வேண்டும். மேலும் வண்ணங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் இருக்க கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக பண்டிகை காலங்களில் பலகாரம் செய்பவர்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையில் வழங்கப்படும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் அவசியம் பெற வேண்டும்.
உரிமம் இல்லாமல் பண்டிகை கால இனிப்பு, கார வகைகள் தயார் செய்தால் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006–ன் படி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment