மேட்டூர்: தீபாவளி சீட்டு நடத்துபவர்களுக்கு, பலகாரம் சப்ளை செய்பவர்களை
கண்காணித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலர் பயன்படுத்தும்
தயாரிப்பாளர் மற்றும் அனுமதி பெறாதவர் மீது நடவடிக்கை எடுக்க உணவு
பாதுகாப்புதுறை முடிவு செய்துள்ளது. சேலம் மாவட்டத்தில், பெரும்பாலான
இடங்களில், பொதுமக்கள் தீபாவளி பலகார சீட்டு போட்டு, மாதம் தோறும் பணம்
செலுத்துவர். சீட்டு போட்டவர்களுக்கு தீபாவளியன்று பலகாரம், பட்டாசு
வழங்கப்படும். இதற்காக தீபாவளி சீட்டு நடத்துபவர்கள், தயாரிப்பாளர்களிடம்
இருந்து மொத்தமாக ஸ்வீட், காரம் கொள்முதல் செய்வர். குறைந்த விலைக்கு
மொத்தமாக கொள்முதல் செய்யப்படும், இதுபோன் ற ஸ்வீட், காரம் தரமானதாக
இருப்பதில்லை. மேலும், ஒரு சிலநாளில் ஸ்வீட், காரம் கெட்டு போய்விடும்.
உடலுக்கு தீங்கு விளைக்கும் கலர்பொடி, தரம் குறைந்த எண்ணையில், மட்டமான
மாவு பொருட்களை கொண்டு தீபாவளி ஸ்வீட், காரம் தயாரிப்பதே இதற்கு
காரணமாகும். இதனால், தீபாவளி ஸ்வீட், காரம் சாப்பிடும் பொதுமக்கள் வயிற்று
போக்கு, வாந்தி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கின்றனர். மேலும், தீபாவளிக்கு
முதல் இரு நாள் மட்டும் தயாரிப்பாளர் பலர் உரிமம் இன்றி திருமண மண்டபம்
மற்றும் வீடுகளில் ஸ்வீட், காரம் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதனால்,
பொதுமக்கள் பாதிப்பதை தடுக்க, தீபாவளி பலகாரங்களை ஆய்வு செய்ய, மாவட்ட உணவு
பாதுகாப்புதுறை முடிவு செய்துள்ளது.
மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்
அனுராதா கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் தீபாவளி பலகாரம் தயாரிக்கும்
பெரும்பாலோர் தரம் குறைவாக உணவு பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைக்கும்
வண்ணத்தையும் உபயோகிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் கடுமையாக
பாதிக்கின்றனர். இதனால், மாவட்டம் முழுவதும் தீபாவளி சமயத்தில் ஸ்பெஷல்
ஸ்வீட், காரம் ஆகியவற்றை ஆய்வு செய்து, தரம் குறைவாக இருந்தால் சம்பந்தபட்ட
தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தீபாவளி சமயத்தில் ஸ்பெஷலாக திருமண மண்டபம் மற்றும் வீடுகளில் ஸ்வீட், காரம் தயாரித்து விற்பவர், உணவு பாதுகாப்புதுறையின் தற்காலிக உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாதவர்கள் மீதும், தரம் குறைந்த தீபாவளி பலகாரம் தயாரிப்பவர்கள் மீதும், உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், தீபாவளி சமயத்தில் ஸ்பெஷலாக திருமண மண்டபம் மற்றும் வீடுகளில் ஸ்வீட், காரம் தயாரித்து விற்பவர், உணவு பாதுகாப்புதுறையின் தற்காலிக உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாதவர்கள் மீதும், தரம் குறைந்த தீபாவளி பலகாரம் தயாரிப்பவர்கள் மீதும், உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment