சென்னை, அக். 1 :
வடசென்னை பகுதிகளில் கடைகளில் பதுக்கிய 25 கிலோ பான்பராக் பறிமுதல் செய்து அழிக்கப் பட்டது
பான்பராக்,
குட்கா, ஹன்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை
விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடையை மீறி சிலர் பதுக்கி வைத்து விற்பனை
செய்வதாக சென்னை மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய
தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லட்சுமி
நாராயணன் தலைமையில் ஆய்வாளர்கள் இளங்கோவன், சிவசங்கரன், ஜெயகோபால், ஜெபராஜ்
உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பாரிமுனை, வண்ணாரப்பேட்டை டி.எச். ரோடு,
ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பண்டல் பண்டலாக மறைத்து வைத்திருந்த, 2
லட்சம்
மதிப்பிலான 25 கிலோ ஹன்ஸ், மாணிக் சந்த், பான்பராக் ஆகியவற்றை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர். அவை மாநகராட்சி குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டி
அழிக்கப்பட்டது.
No comments:
Post a Comment