காயல்பட்டினத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான குழுவினர்,காயல்பட்டினம் கடைவீதிப் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். எல்.கே. தொடக்கப்பள்ளி அருகில் உள்ள உணவகத்துக்கு அருகில் சுகாதாரக் கேடான நிலையிலிருந்த பகுதிகளைக் கண்ட அவர்கள், ஹோட்டல் உரிமையாளர்களிடம் எச்சரித்ததையடுத்து, அவர்கள் உடனடியாக அவற்றை சுத்தப்படுத்தினர். அதுபோல, கூலக்கடை பஜாரிலுள்ள பலசரக்கு மளிகையொன்றில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், அக்கடைக்குச் சென்று சோதனையிட்ட அதிகாரி, காலாவதியான பொருள்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

No comments:
Post a Comment