பழனி, செப்.26-திண்டுக்கல்
மாவட்டத்தில் இந்திய தரச்சான்றிதழ் பெறாத 9 குடிநீர் நிறுவனங்களுக்கு
மாவட்ட உணவு பாது காப்பு மருந்துவ துறை நியமன அலுவலரால் சீல்
வைக்கப்பட்டது.ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ்திண்டுக்கல்
மாவட்டத்தில் சுவையூட்டப்பட்ட குடிநீர், மூலிகை குடிநீர் என்ற பெயர் களில்
9 குடிநீர் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இக்குடி நீர் நிறுவனங்கள்
தங்களின் குடிநீரின் சுவையை கூட்ட அதிமதுரம் சேர்ப்பதாகவும், மூலிகை
குடிநீரில் மூலிகைகள் சேர்ப்பதாகவும் விளம்பரம் செய்து விற்று வந்தன. ஆனால்
இந்நிறுவனங்கள் யாவும் ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ் பெறவில்லை என்று கூறப்படு
கிறது. இந்நிலையில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் திண்டுக்கல்
மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறை அலுவலக நியமன அலுவலர் டாக்டர்
குணசேகரன் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன்
திண்டுக்கல் மாவட்டம் முழு வதும் 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.இதில்
பழனி பகுதியில் இயங்கி வந்த 5 தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் தயாரிப்பு
நிறுவனங்களும், திண்டுக்கல் நத்தம், ரெட்டியார் சத்திரம், ஒட்டன்சத்திரம்
ஆகிய பகுதி களில் இயங்கி வந்த 4 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களை ஆய்வு
செய்தார். அப்போது அந்நிறுவனங்கள் எவ்வித அரசு அனுமதியும் இன்றி குடிநீர்
தயாரித்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனங் களை அதிகாரிகள்
சீல் வைத்த னர்.முன் அறிவிப்புஇதுபற்றி உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறை நியமன அலுவலர் நிருபர்களிடம்கூறிய தாவது:-திண்டுக்கல்
மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் 9 குடிநீர் தயாரிப்பு நிறு வனங்கள் மத்திய
அரசு தரச் சான்றிதழ் இன்றியும், குடிநீர் நிறுவனத்தை நடத்த எந்த தடையும்
இல்லை என்ற அனுமதி சான்று இல்லாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக் கப்பட்டது.
இவர்களுக்கு கடந்த 10 நாட் களுக்கு முன்பு ஒரு குறிப் பாணை
வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2-வது குறிப்பாணையில் ஏன் உங்கள்
நிறுவனத்திற்கு சீல் வைக்க கூடாது என கேட்டு அனுப் பப்பட்டது. இதைத்
தொடர்ந்து நேரடியாக சம்பந் தப்பட்ட குடிநீர் நிறுவனங் களுக்கு சென்று ஆய்வு
செய்து அந்நிறுவனங்களை மூடி சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்
டுள்ளது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment