மேல்மலையனூர்
செஞ்சியில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை யில் 86 பாக்கெட் கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்
மாவட்ட ஆட்சியர் சம்பத் உத்தர வின் பேரில், மாவட்ட நிய மன அலுவலர்
டாக்டர். ஆறுமுகம் வழிகாட்டுதலின் படி செஞ்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கதிர
வன், விக்கிரவண்டி ஒன்றிய அலுவலர் ரவிக்குமார், முகையூர் ஒன்றிய அலுவலர்
கணேசன் ஆகியோர் நேற்றுமுன்தினம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள கடைகளில்
அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சரவணா தியேட் டர் அருகே உள்ள கடையில் 86
பாக்கெட் கலப்பட டீ தூள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அவற்றை கைப்பற்றிய
அதிகாரிகள் தரமற்ற டீ தூள்களை டீ கடைக்காரர்கள் பயன்படுத்தக்கூடாது என்று
எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் கலப்பட
பொருள் விவகாரத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென
அறிவுறுத்தினர். கலப்பட பொருட்களை விற்றால் கடை உரிமையாளர்கள், வியாபாரிகள்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment