தூத்துக்குடி, ஆக. 30:
தூத்துக்குடி
குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கெட்டுப் போன ரூ.6 கோடி மதிப்பிலான
3,500 டன் ஆஸ்திரேலிய பட்டாணியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்
செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள ஒரு
குடோனில் கெட்டுப்போன பட்டாணி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர்
ரவிக்குமாருக்கு தகவல் கிடைத் தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உணவு
பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பைபாஸ் ரோட் டில்
மீன்வளக் கல்லூரி அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் உணவு பாதுகாப்பு நியமன
அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ், பாதுகாப்பு அதிகாரிகள் ராமகிருஷ்ணன்,
சந்திரமோகன் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது
அங்கு அழு கிய நிலையில் பட்டாணி மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்தது.
மேலும், இவை கடந்த 6 மாதமாக கெட்டுப் போய் இருந்ததால் கடுமையான துர்நாற்றம்
வீசியது. குடோனில் இருந்த 3,500 டன் பட்டாணியை அதிகாரிகள் பறிமுதல்
செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 கோடி ஆகும்.
விசாரணையில்,
கடந்த 6 மாதத்திற்கு முன் தூத்துக்குடி நிறுவனத்தால் ஆஸ்திரேலியாவில்
இருந்து கப்பல் மூலம் பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றும் கடலில்
வரும்போது, பட்டாணியில் நீர் புகுந்ததால் அவை பூஞ்சை படர்ந்து கெட்டு போய்
விட்டது.
மேலும், 6 மாதமாக அடைத்து,
குவித்து வைக்கப்பட்டிருந்ததால் அவை துர்நாற்றம் வீசி, விஷத்தன்மை கொண்டதாக
மாறியுள்ளதாக கூறி அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.
மேலும்,
இந்த பட்டாணியை நல்ல பட்டாணியுடன் கலந்து விற்பனை செய்யவும் திட்டமிட்டு
இருந்தது தெரியவந்தது. இதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதிகாரிகள் அதனை
சென்னை கிண்டியில் உள்ள அரசு நுண்ணுயிர் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி
வைத்துள்ளனர்.
இந்த ஆய்வறிக்கை அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment