Jul 7, 2013

அரசின் தடையை மீறிபுகையிலை விற்பனை

பனமரத்துப்பட்டி: தமிழக அரசின் தடை உத்தரவை மீறி, வாரச்சந்தையில் புகையிலை விற்பனை அமோகமாக நடக்கிறது.தமிழக அரசு, மே, 23ம் தேதி முதல், போதை வஸ்துகள் விற்பனைக்கு தடை விதித்தது. அரசின் தடை உத்தரவை மீறி, போதை பொருட்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்வேர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நகரப்பகுதியில் பான்பராக், குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவைகளை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதே போல், கிராம பகுதியில் உள்ள முதியவர்கள், பெண்கள் புகையிலையை வெற்றிலை பாக்குடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர்.புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு வாய், முகம், தொண்டை ஆகிய பகுதியில், புற்றுநோய் பாதிப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு உண்டாகிறது.பனமரத்துப்பட்டி, மல்லூர், நாழிக்கல்பட்டி, குள்ளப்பநாயக்கனூர் வார சந்தைகளில் புகையிலை அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. மல்லூர், பனமரத்துப்பட்டியில் வெற்றிலை, பாக்கு விற்பனை செய்வோர் புகையிலை சேர்த்து, மளிகை கடை, பீடா கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்கின்றனர்.அரசின் தடை உத்தரவை மீறி, கடைகளில் புகையிலை விற்பனை செய்வதை கட்டுப்படுத்தாமல், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.

No comments:

Post a Comment