இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியில், புகையிலை, காலாவதியான குளிர்பான பாக்கெட்கள் ஆகியவற்றை கைப்பற்றிய உணவு பாதுகாப்புத்துறையினர், அவற்றை தீயிட்டு அழித்தனர்.இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுப்பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும், காலாவதியான குளிர்பான பாக்கெட்களும் விற்கப்படுவதாக, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதையடுத்து, இடைப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அலுவலர்கள், நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, காலாவதியான குளிர்பான பாக்கெட்களும், 60 கிலோ புகையிலையையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது.
அப்போது, காலாவதியான குளிர்பான பாக்கெட்களும், 60 கிலோ புகையிலையையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது.
No comments:
Post a Comment