தமிழகம் முழுவதும், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், முறையான அனுமதி
பெற்றுள்ளதா என்பதை கணக்கெடுக்கும் பணியை, மாசு கட்டுப்பாட்டு வாரியம்
துவங்கியுள்ளது.
சென்னையில், குடிநீர் தயாரிப்பு
நிறுவனங்களில் இருந்து, விற்பனைக்கு அனுப்பப்படும் குடிநீர்,
பாதுகாப்பற்றது என, தெரிய வந்ததால், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்,
தாமாக முன் வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், அனுமதியின்றி செயல்பட்ட, 92
குடிநீர் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இதில், 85 நிறுவனங்களின் மாதிரிகள்
பரிசோதிக்கப்பட்டு, அறிக்கை பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டு
உள்ளது. இதை ஆய்வு செய்த பசுமைத் தீர்ப்பாயம், 51 நிறுவனங்களைத்
திறக்கவும், மீதமுள்ள, 41 நிறுவனங்களில், குடிநீர் மாதிரிகளை மீண்டும்
பரிசோதிக்கவும் உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, குடிநீர்
தயாரிப்பு நிறுவனங்கள், முறையான அனுமதி பெற்றுள்ளதா என, ஆய்வு செய்து
நடவடிக்கை எடுக்கவும், தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதன்படி, பரிசோதனையில்
தேறிய, 51 நிறுவனங்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் திறந்துவிட்டது. 41
நிறுவனங்களிலும், மாதிரிகள் எடுத்து, பரிசோதனை நடந்து வருகிறது. அடுத்த
கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள, குடிநீர் நிறுவனங்கள் குறித்த
கணக்கெடுப்பு துவங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மாசு
கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் செயல்பட்டு
வரும் குடிநீர் நிறுவனங்கள் குறித்தும், ஐ.எஸ்.ஐ., அனுமதி, மாசு
கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் இயங்கும் நிறுவனங்கள் குறித்தும்
கணக்கெடுப்பு நடந்து வருகிறது. மாவட்ட பொறியாளர்கள், இரண்டு நாட்களாக
ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 10 நாட்களில் ஆய்வு முடியும். இதுப்பற்றிய
அறிக்கை, ஜூலை, 2ம் தேதி தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு,
அவர் கூறினார். தமிழக குடிநீர் தயாரிப்பாளர் சங்கத்தில், 869 நிறுவனங்கள்
பதிவு செய்து உள்ளன. இதுதவிர, குடிசைத் தொழில்போல், எந்த அனுமதியுமின்றி,
ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மொத்த குடிநீர் நிறுவனங்களின்
எண்ணிக்கை, ஆயிரத்தைத் தாண்டும் என, கூறப்படுகிறது.
We at Ziyyara make education accessible for those who look for an affordable online tuition in Lucknow. Get tuition from our online home tutors in Lucknow at any time.
ReplyDeleteCall Our Experts :- +91-9654271931