சேலம்
வருகிற 24–ந் தேதிக்கு மேல் குட்கா,
பான்மசாலா விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் குட்கா, பான்மசாலா
போன்ற பொருட்களின் விற்பனை, நுகர்வோரின் தடை செய்வது குறித்த ஆலோசனை
கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட
கலெக்டர் மகரபூஷணம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில்
குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்களை தடை செய்யும் பொருட்டு மாவட்ட
அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக மாவட்ட கலெக்டர்
உள்ளார். குழுவில் போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு, வருவாய் அதிகாரி,
சுகாதார பணிகள் துணை இயக்குனர், மாநகராட்சி ஆணையர், உள்பட பலர்
நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவின் ஒருங்கிணைப்பாளராக உணவு பாதுகாப்புத்துறை
நியமன அலுவலர் உள்ளார்.
24–ந் தேதிக்குள்
கூட்டத்தில் கலெக்டர் மகரபூஷணம் பேசியதாவது:–
கடந்த மாதம் 23–ந் தேதி முதல் பான்மசாலா,
குட்கா போன்ற பொருட்களை தமிழகத்தில் விற்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை
விதிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் தாங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை
வருகிற 24–ந் தேதிக்குள் அகற்றிட வேண்டும்.
நாளை(இன்று) முதல் நாளை முதல் குட்கா
பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்யப்படும்.
இருப்பு வைத்திருக்கும் கடைகளுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்படும். வட்டார
போக்குவரத்து அலுவலர்கள் மூலம் வாகன ஓட்டுநர்களுக்கு இதுகுறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பள்ளி–கல்லூரி
கல்வித்துறையின் மூலம் பள்ளி மற்றும்
கல்லூரி முதல்வர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவ
மாணவியர்களுக்கு தகுந்த அளவிற்கு விழிப்புணர்வுகள் வழங்கப்படும்.
மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து கடைகளும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு
விற்பனைக்கு தடை விதிக்க அறிவுறுத்தப்படும்.
வருகிற 24–ந்தேதிக்கு மேல் கடைகளில்
குட்கா பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்தாலோ, பொதுமக்கள் இதுபோன்ற
பொருட்களை பயன்படுத்தினாலோ அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment