கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 10 டன் மாம்பழங்கள் பறிமுதல்
விழுப்புரம்:
விழுப்புரத்தில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்காக
வைத்திருந்த 10 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்திருப்பது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் மாம்பழங்களை வாங்கி சாப்பிடவுடன் வயிற்று வலியும், வயிற்று போக்கும் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் பொதுமக்கள் பலர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து புகார்களை அனுப்பியுள்ளனர். அதையடுத்து, இன்று காலை விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள மாம்பழ கடைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, ஆறு கடைகளில் கார்பைட் கல் வைத்து பழுக்க
வைக்கப்பட்ட 10 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும் மாம்பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்திய ஐந்து கிலே கார்பைட்
கல்லையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆறு கடைகளும் பழங்களை
மொத்தமாக விற்பனை செய்யும் கடைகள். இந்த கடைகளில் இருந்து தான் சுற்றியுள்ள
அனைத்து சில்லரை விற்பனையாளர்களும் மாம்பழங்களை வாங்கி சென்று விற்பனை
செய்வது வழக்கம்.
உணவு பாதுகாப்பு அதிகாரி ஆறுமுகம் நம்மிடம், தற்போது
விழுப்புரத்தில் 6 மொத்த விற்பனை கடைகளில் சோதனை நடத்தி கார்பைட் கல்
வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்துள்ளோம்.
அதேபோல் சில்லறையில் பழங்களை விற்பனை செய்யும் பழக் கடைகளிலும் சோதனை செய்ய
இருக்கிறோம் என்றார்.
மேலும், ‘‘கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்
கருப்பாகவும், தோல் சுருங்கியும், தண்ணீர் வடிந்தும் இருக்கும்.
இப்படிப்பட்ட மாம்பழங்களை பார்த்தவுடன் பொது மக்கள் உஷாராக வேண்டும்.
மாம்பழங்களை சாப்பிட்டவுடன் வயிறு வலி ஏற்பட்டால் சூடு என்பார்கள். வயிறு
வலிக்கு சூடு காரணமில்லை, கார்பைட் கல் தான் காரணம். மாம்பழங்களை ஒரு மணி
நேரம் தண்ணீரின் ஊற வைத்துவிட்டு பிறகு சாப்பிட்டால், கார்பைர் கல்லின்
பாதிப்பு குறைவாக இருக்கும்’’ என்றார்.
|
No comments:
Post a Comment