கந்தூரி விழா: நாகூர் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
நாகூர் கந்தூரி விழாவையொட்டி, நாகூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
கந்தூரி விழாவையொட்டி, நாகூர் பகுதிகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களை
உரிய வகையில் ஆய்வு செய்து, தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என மாவட்ட
ஆட்சியர் அண்மையில் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன்
தலைமையில் 4 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர், நாகூர் பகுதியில் உள்ள உணவுப் பொருள் விற்பனை கடைகள், டீ
கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, உணவுப் பொருள்களை திறந்த நிலையில் விற்பனைக்கு வைக்கக் கூடாது,
கலப்பட டீதூள்களைக் கொண்டு தேநீர் தயாரிக்கக் கூடாது, உற்பத்தி தேதி,
காலாவதி தேதியில்லாத பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களை
விற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன், உணவுப்
பாதுகாப்பு அலுலர்கள் சதீஷ்குமார், ஆண்டனி, மகாராஜன், பிரவீன், ரகு ஆகியோர்
இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment