சேலத்தில் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான
குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேலம் நகரில் காலாவதியான
குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்புத்துறை
அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா,
தலைமையிலான குழுவினர், சேலம் புதிய பேருந்து நிலையத்தில், ஆய்வு
மேற்கொண்டனர். தரமற்ற எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்கள்,
ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத குளிர் பானங்களை மற்றும் காலாவதியான
குளிர்பானங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment