ஏற்காடு: ஏற்காட்டில், ஒண்டிக்கடை, ஏரி பகுதியில் உள்ள கடைகளில், உணவு
பாதுகாப்பு குழுவினர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.சேலம் மாவட்டத்தில்,
காலாவதியான உணவுப் பொருட்கள் அதிகளவில் விற்கப்படுகிறது. பொதுமக்களும்,
அவற்றில் அக்கறை கொள்ளாமல், பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், உடல்
உபாதைக்கு ஆளாகி மருத்துவ சிகிச்சை பெறும் நிலை உள்ளது.மாவட்ட உணவு
பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு குழு, சேலம்
மாவட்ட பகுதிகளில், தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று,
ஏற்காட்டில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். ஏரியை சுற்றிலும் உள்ள
கடைகளில், காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்கள் இருப்பில் இருந்தது
தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். 60க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.மேலும், ஸ்டெர்லிங் ஹோட்டலில் ஆய்வு நடத்தியபோது,
இறைச்சியையும், ஐஸ்கிரீமையும் ஒரே பிரீஸரில் வைத்து இருந்ததும், காய்கறிகள்
அனைத்தும் பூஞ்சை காளான் படர்ந்து இருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து,
சம்மந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.ஒரு
வாரத்துக்குள், சுகாதாரமான முறையில் ஹோட்டலை அமைக்க வேண்டும் என
உத்தரவிடப்பட்டது. ஆய்வில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரவணன்,
சிவானந்தன், சிரஞ்சீவி, ஆறுச்சாமி, ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment