Dec 11, 2012

Dinakaran

சேலம், டிச. 11:
சேலம் மாவட்டத்தில் உணவு, சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் மூலப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், வியாபாரிகள் வரும் பிப்., 4ம் தேதிக்குள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் பதிவு செய்து, லைசென்ஸ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஆக., 5 முதல் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ், அனைத்து உணவு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் லைசென்ஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பீடாக்கடைகள், ரேஷன் கடைகள், அரிசி, ஜவ்வரிசி ஆலைகள், குடிநீர் தயாரிப்பு ஆலைகள், சாலையோரக்கடைகள், சில்லி சிக்கன் கடைகள், பள்ளி கல்லூரி கேன்டீன்கள், மருத்துவமனை கேன்டீன்கள், சமையல் காண்டிராக்டர்கள், மதுபானக்கடை ‘பார்’கள்; சமையல் எண் ணெய் தாயரிப்பாளர்கள், பேக்கரி, ஓட்டல், ஸ்வீட் ஸ்டால்கள், மளிகை, டீக்கடைக்காரர்கள், குளிர்பானம், ஐஸ் தயாரிப்பாளர்கள், தனியார், ஆவின் பால் விற்பனையாளர்கள், பால் சேகரிப்பு மையங்கள், வீடுகளுக்கு பால் விற்பனை செய்பவர்கள், இறைச்சி வியாபாரிகள், பலகாரம் தயாரிப்பவர்கள், தெருவில் கூவி விற்பனை செய்பவர்கள், குடிநீர் விற்பனையாளர்கள், ஃபாஸ்ட் ஃபுட் கடைக்காரர்கள்; உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையில் இருந்து பொதுமக்கள் உண்ணும் நிலை வரை என சிறு வியாபாரிகள் முதல் பெரிய உணவு தயாரிரப்பாளர்கள் வரை உள்ள அனைவரும் தங்கள் நிறுவன விவரங்களை தங்கள் பகுதி யில் நியமிக் கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கும் குறைவாக விற்று முதல் உள்ள விற்பனையாளர்கள் இவர்களிடம் பதிவு செய்யலாம். ரூ.12 லட்சத்துக்கு மேல் விற்று முதல் உள்ளவர்கள் மாவட்ட நியமன அதிகாரியிடம் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். பதிவு அல்லது லைசென்ஸ் பெறாமல் உணவுப்பொருள் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம். லைசென்ஸ் இல்லாமல் விற்பனை செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாத சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். வரும் 2013ம் ஆண்டு பிப்., 4ம் தேதிக்குள் லைசென்ஸ், பதிவு சான்றிதழ் பெற வேண்டும். உரிமம் பெறுவது தொடர்பான தகவல்களை பெற, மாவட்ட நியமன அலுவலரை 94435 20332 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனு ராதா தெரிவித்துள்ளார்.

ரூ.12 லட்சத்துக்கு குறைவாக விற்று முதல் உள்ளவர்கள் கீழ்க்கண்ட அலுவலர்களிடம் பதிவு செய்ய வேண்டும். அதிகாரிகளின் செல்போன் எண் விவரம்:
ஆத்தூர் ஒன்றியம்&94438 26557, அயோத்தியாப்பட்டணம்&94432 42336, இடைப்பாடி&94866 91567, கெங்கவல்லி&99426 84326, காடையாம்பட்டி&99523 92436, கொளத்தூர்&97883 26647, கொங்கணாபுரம்&94435 75475, மகுடஞ்சாவடி&94421 49949, மேச்சேரி&97876 42822, நங்கவள்ளி&94436 41203, ஓமலூர்&94421 52857, பனமரத்துப்பட்டி&98657 70834, பெத்தநாய்க்கன்பாளையம்&94430 11687, சேலம்&97155 66399, சங்ககிரி&94431 28020, தலைவாசல்&94430 18235, தாரமங்கலம்&94439 84281, வாழப்பாடி&96987 21020, வீரபாண்டி&99422 38465, ஏற்காடு&98427 85883.
நகராட்சி: ஆத்தூர் நகராட்சி&93626 63843, இடைப்பாடி நகராட்சி&96778 13265, மேட்டூர் நகராட்சி&87541 16103.
சேலம் மாநகராட்சி: சூரமங்கலம் மண்டலம்&94434 33140, அஸ்தம்பட்டி மண்டலம்&94864 90813, அம்மாபேட்டை மண்டலம்&81483 62166, கொண்டலாம்பட்டி மண்டலம்&94434 33140.

1 comment: