Dec 12, 2012

ஓட்டல்களில் ரேஷன் பாமாயில் !


ஊட்டி: நீலகிரியில், தரமற்ற உணவு பண்டங்களின் விற்பனை குறித்த, உணவு பாதுகாப்பு துறையினரின் "ரெய்டு' தொடர்கிறது. ஓட்டல்களில் பயன்படுத்தி வந்த, ரேஷன் பாமாயிலும் பறிமுதல் செய்யப்பட்டன.நீலகிரியில், தரமற்ற உணவு பண்டங்களின் விற்பனை குறித்து, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் டாக்டர் ரவி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வராஜ், ஆதி கோபாலகிருஷ்ணன், அருண் உட்பட குழுவினர் சில நாட்களாக "ரெய்டு' நடத்தி வருகின்றனர்.

எல்லநள்ளியில் ஏகப்பட்ட பிரச்னை: நேற்று காலை, ஊட்டி அருகே எல்லநள்ளி, கேத்தியில் உள்ள ஓட்டல், மளிகை கடைகளில் "ரெய்டு' நடத்தப்பட்டது. இதற்கு பின், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரவி கூறுகையில், ""கேத்தியில் உள்ள தனியார் கல்லூரி கேன்டினில் நடத்தப்பட்ட ஆய்வில், சாயம் கலந்த கலப்பட தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

சுகாதாரமான முறையில் உணவுப் பண்டங்களை தயாரிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது."ரேஷன் கடைகளில் விற்கப்படும் பாமாயில், வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது,' என்ற நிலையில், எல்லநள்ளியில் உள்ள ஒரு ஓட்டலில், அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டது.

"செயற்கை' தட்டுப்பாடு :

இதன் மூலம் ரேஷன் கடைகளில் இருந்து, பாமாயில் "பிளாக்' மார்க்கெட்டில் விற்பனை செய்வது ஊர்ஜிதமாகி உள் ளது. இதனை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், மக்களுக்கு பாமாயில் கிடைக்காத "செயற்கை' தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. மற்றொரு ஓட்டலில், சமையலுக்கு தயாராக இருந்த அழுகிய காய்கறிகள், திறந்த நிலையில் பாதுகாப்பற்ற சூழலில் வைக்கப்பட்டிருந்த மீன்கள் அகற்றப்பட்டன.
பல உணவுப் பொருட்களை தயாரிக்க, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மறு சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய உணவை உண்பதால் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஒரு வார காலத்திற்குள் இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள் ளது,'' என்றார்.

1 comment: