May 7, 2012

DINAMALAR NEWS

கம்பம்:மாங்காயை பழுக்க வைக்க கால்சியம் கார்பனேட் கட்டிகளுக்கு பதில், "எத்திலின்' திரவத்தை பயன்படுத்தலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 16 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாங்காய்களை விரைவாக பழுக்க வைக்க, விவசாயிகள் கால்சியம் கார்பனேட் கட்டிகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு சுகாதாரத் துறையினர் தடை செய்துள்ளனர். கார்பனேட் கட்டிகளை பயன்படுத்தி பழுக்க வைப்பதால், மாங்காய்கள் பழுத்தது போல நிறம் மாறும். ஆனால், காய்க்குள் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு, சாப்பிடுவோருக்கு நெஞ்சு எரிச்சல், வயிற்று போக்கு உண்டாகும். மாங்காய்களை விரைவாக பழுக்க வைப்பது குறித்து, பெரியகுளம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சுப்பையா கூறியதாவது : மாங்காய்களை 24 முதல் 32 மணி நேரத்திற்குள் பழுக்க வைக்க எத்திலின் திரவத்தை பயன்படுத்தலாம்.

ஒரு லிட்டர் தண்ணீரில் பாயின்ட் 3 மில்லி முதல் அரை மில்லி வரை கலந்து, அந்த கரைசலில் மாங்காய்களை நனையும்படி செய்தால், பழமாகி விடும். தற்போது எத்திலின் ஸ்பிரே வந்துள்ளது. ஒருடன் மாங்காய் பழுக்க வைக்க ரூ. 250 செலவாகும். இதை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. எத்திலினை பயன்படுத்தி, பழுக்க வைப்பதன் மூலம், நுகர்வோருக்கு எவ்வித உடல் உபாதையும் ஏற்படாது,' என்றார்.

No comments:

Post a Comment