ஊட்டி : உணவு ஆய்வக துறையை சேர்ந்த சிவக்குமார் என்ற அதிகாரி லஞ்சம் கேட்டு வியாபாரிகளை வற்புறுத்தி வருவதாக அவரை கண்டித்து ஊட்டி தாலுகா முழுவதிலும் உள்ள வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி தாலுகாவை சேர்ந்த ஹோட்டல்கள், கடைகளை சேர்ந்த சுமார் 2000 முதல் 3000 வரையிலான வியாபாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோடை விடுமுறை சீசனில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாப்பாட்டிற்கு வழியின்றி திண்டாடி வருகின்றனர்.
No comments:
Post a Comment