Jun 25, 2014

FSSAI GAZETTE NOTIFICATION - USE ENCAPSULATION OF FERROUS FUMARATE AND ADDITIVES FOR DOUBLE FORTIFIED SALT



திருச்சி கடைகளில்காலாவதி குளிர்பானங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிரடி



திருச்சி, ஜூன் 25:
திருச்சி சத்திரம் பேருந்து நிலைய கடைகளில் விற்கப்பட்ட ரூ.50ஆயிரம் மதிப்பிலான காலாவதி குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள மற்றும் போலி குளிர்பானங் கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி டாக்டர் ராமகிருஷ் ணன் தலைமையில் அலுவலர்கள் செல்வ ராஜ், கேசவமூர்த்தி, முத்துக்குமாரசாமி, கருப்பசாமி, பிரகாஷ், முத்துராஜ் ஆகி யோர் கொண்ட குழுவினர் 3 பிரிவுகளாக சென்று அதிரடி சோதனை மேற்கொண்ட னர்.
இதில் 100க்கும் மேற்பட்ட கடைகளில் 2மணி நேரம் வரை நடத்தப்படட சோதனையில் 10 கடைகளில் ரூ.50ஆயிரம் மதிப்பிலான காலாவதியான குளிர்பானங்கள், போலி குளிர்பானங்கள் விற் பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரி ராமகிருஷ்ணன் கூறுகையில், கடைகளில் கண்டுபிடிக்கப்பட்ட காலாவதி மற்றும் போலி குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட குளிர்பானங்கள் மாநகராட்சி கிடங்கில் உடனடியாக கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் 2 குளிர்பானங்கள் மற்றும் 2 ஸ்வீட் கடைகளிலிருந்து ஆய்வுக்காக மாதிரிகளை எடுத்து மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்பராக், கலப்பட டீ து�ள்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சோதனைகள் மாநகரில் உள்ள அனைத்து குளிர்பான கடைகளில் தொடர்ந்து நடை பெறும். சோதனை நடத்தப்பட்ட கடைகளில் மீண்டும் காலாவதியான குளிர்பானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
 
கடும் எச்சரிக்கை...
மேலும் ராமகிருஷ்ணன் கூறுகையில், கம்பெனியாளர்கள் மீது குற்றம்சாட்டும் விற்பனையாளர்கள் கம்பெனிகளில் வந்து இறங்க கூடிய குளிர்பானங்கள் காலாவாதியானதா? பிரபல குளிர்பானங்களின் பெயரில் போலி குளிர்பானங்கள் வருகிறதா? என சோதித்த பின்னரே குளிர்பானங்களை விற்பனையாளர்கள் வாங்கி விற்க வேண்டும். கம்பெனியாளர்கள் மீது விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு கூறக்கூடாது என வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றார். பொதுமக்கள் உஷார்...
குறைந்த விலைக்கு குளிர்பானங்கள் விற்பதை பொதுமக்கள் உடனே வாங்கிச் செல்லக்கூடாது. குளிர்பானம் வாங்கும் போது அது காலாவதியானதா?கம்பெனி குளிர்பானம் தானா அல்லது போலியானதா என பரிசோதித்த பின்னரே வாங்க வேண்டும். குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்று பொதுமக்கள் வாங்கிச் செல்லக் கூடாது. இதனால் பாதிப்பு பொதுமக்களுக்கு தான். இனியாவது பொதுமக்கள் உஷாராக இந்து காலாவதியான குளிர்பானங்களை சோதித்து பின்னரே வாங்க வேண்டும் என்றார் அதிகாரி ராமகிருஷ்ணன்.
டயல் செய்யுங்கள்
பொதுமக்கள் குளிர்பானங்கள் வாங்க வரும் போது காலவதியான குளிர்பானங்கள் என சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட கடையின் பெயர் குறித்து உடனடியாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அலுவலரிடம் நேரில் வந்து புகார் அளிக்கலாம். அல்லது 0431&2333330 என்ற தொலை பேசியிலும் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக சம்மந்தப்பட்ட கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தூத்துக்குடியில் அதிர்ச்சி சாயன ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்படும் வாழை பழங்கள்

தூத்துக்குடி, ஜூன் 25:
ரசாயன கலவைகளால் பழுக்க வைக்கப்பட்ட வாழை, மாம்பழங்கள் தூத்துக்குடியில் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது மாம்பழ சீசன் நடந்து வருகிறது. தற்போதுள்ள அவசர காலத்தில், மாம்பழங்கள் ரசாயன கல்லான கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறது. இந்த கல்லானது மாங்காய்களை கூட எளிதில் பழமாக்கி விடுகின்றன. கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை வாங்கி உண்பவர்கள்வயிற்றுக் கோளாறு நோய்களுக்கு உள்ளாகின்றனர்.
மாம்பழ சீசன் காலங்களில் உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகள்பழக்கடைகளில் திடீர் சோதனை நடத்தி கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்து விடுகின்றனர். ஆயினும், இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. வியாபாரிகளின் சுயநல நோக்கத்தினால் பழத்தை வாங்கி உண்ணும் அப்பாவிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இந்நிலையில், மாம்பழங்கள் போக தூத்துக்குடி பகுதிகளில் வாழைப் பழங்கள்கூட ரசாயன மருந்து தெளிக்கப்பட்டு பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மார்க்கெட் மற்றும் சில பழக்கடைகளில் வாழைக்காய்கள் ரசாயன மருந்து ஸ்பிரே மூலமாக பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழங்களை வாங்கி உண்பவர்கள் வயிற்று வலி, வயிற்றுக் கோளாறு போன்ற நோய் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.
எனவே உணவு கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்ட பழங்களின் சீசன் காலங்களில் மட்டும் அல்லாது இதர சமயங்களிலும் அனைத்து பழக் கடைகளில் சோத னை மேற்கொள்ள வேண் டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நகராட்சிக்குட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பொள்ளாச்சி, ஜூன் 25:
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை மற்றும் வணிக வளாக கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் போதை பாக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து கொண்டிருப்பதாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, நேற்று பொள்ளாச்சி தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் நகரில் உள்ள பல கடைகளில் சோதனை செய்தனர்.
நகரில் சத்திரம் வீதி, தேர்நிலை, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பல கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் பான்மசாலா பாக்கெட்டு பெட்டி பெட்டியாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 25 கடைகளில் பான்மசாலா மற்றும் போதைபாக்கு பாக்கெட்டுகள் மொத்தம் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
அது போல், நகரில் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட்டிற்குட்பட்ட கடைகளில் சுகாதார பிரிவு அலுவலர் (பொறுப்பு) மாரியப்பன் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். 25 கடைகளில், 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் மொத்தம் 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சரக்கு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டு நகராட்சிக்குட்பட்ட நல்லூர் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

காலாவதி குளிர்பானம் அழிக்க ஏற்பாடு


கோவை, ஜூன் 25: கோவை வாலாங்குளம் பாலத்தின் கீழ் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை அழிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கோவை வாலாங்குளம் பாலத்தின் அடியில் 2011ம் ஆண்டு காலாவதியான குளிர்பான பாட்டில்கள் கொட்டப்பட்டு கிடந்தன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு 180 மில்லி பிடிக்க கூடிய மாம்பழ குளிர்பானங்களை மர்ம நபர்கள் வேன் அல்லது லாரி மூலமாக கொண்டு வந்து கொட்டி சென்றனர். சிறுவர்கள் அப்பகுதிக்கு விளையாட செல்லும் போது அந்த குளிர்பானத்தை குடித்தால் நோய் ஏற்படும் அபாயம் இருந்ததால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலாவதியான குளிர்பான பாட்டில்களை உடனடியாக கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருணா கூறுகையில், “தற்போது காலாவதியான குளிர்பான பாட்டில்கள் உணவுக் கடத்தல் பிரிவு அலுவலரிடம் சாம்பிள் எடுக்கும் பணிக்காக வழங்கப்பட்டுள்ளன.
அதற்கு பிறகு பாதுகாப்பான முறையில் அவை கொட்டி அழிக்கப்படும். காலாவதியான குளிர்பானங்களை கொட்டி சென்ற மர்ம நபர்கள் மீத சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றார்.

காரைக்குடி பகுதியில் தடையை மீறி பான் மசாலா விற்பனை ஜோர் ரெய்டு நடத்த அதிகாரிகள் தயக்கம்


காரைக்குடி, ஜூன் 25:
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அரசின் தடையை மீறி பான் மசாலா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள தயக்கம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியுடன் பான்மசாலா, புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்பனை செய்யக் கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப் பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதியுடன் விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்திருந்தார். ஆனால் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இவற்றை பறிமுதல் செய்ய உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய அலுவலர்கள் இல்லாததால் அதிரடி ரெய்டு நடந்த இத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மாநில அளவில் 13 சதவீதம் பேர் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். தவிர பள்ளி, கல்லூரியில் படிப்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சமூகஆர்வலர் செந்தில் கூறுகையில். மாநில அளவில் தினமும் 4 கோடிவரை இப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.100 கோடிவரை வருவாய் கிடைப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. பான்மசலா, புகையிலையை பயன்படுத்துவதால் புற்று நோய், சிறுநீரகம், நரம்பு மண்டலம், மூளை பாதிப்பு உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரூ.5 க்கு விற்பனை செய்யப்பட்ட பாக்கெட் ரூ. 10 முதல் 15 வரையும், சற்று பெரிய அளவிலான பாக்கெட் ரூ 30 வரையும் கொள்ளை லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். கிராமப்பகுதிகளில் கடைகளில் நேரடியாகவே விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் 420, 120, ஜர்தா போன்ற பீடா வகை களையும் தடை செய்ய வேண்டும் என்றார்.
மருத்துவர் ஒருவர் கூறுகையில். பான்மசாலா, வாயில் மெல்லும் உணவு பொருட்களில் காரியம், சோடியம் கார்பனேட், அமோனியா, அமோனியம் கார்பனேட், நைட்ரஸ் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் நச்சு பொருட்கள் அதிக அளவில் உள்ளன. நீண்ட காலம் இப்பொருட்கள் பயன்படுத்துவோர்களுக்கு பற்கள், ஈறுகள் சிதைந்து போகும், வாயில் புகையிலையை வைப்பதால் அரித்து துளை ஏற்படும் வாய்ப்புள்ளது. இப் பழக்கத்தை திடீர் என நிறுத்தினால் ஏற்படும் பாதிப்பு விரைவில் சரியாகி விடும் என்றார்.

DINAMALAR NEWS



DINAMALAR NEWS


DINAMALAR NEWS


நீங்கள் குடிப்பது நல்ல தண்ணீரா? குடிநீரில் இருக்கிறது குழப்பங்கள்!


குடிப்பதற்கான நல்ல தண்ணீர் எது?குடிநீருக்கு என சிறப்பு இயல்புகள் உள்ளனவா என்றால், ஆம் என்று தான் சொல்ல வேண்டும்.நாம் குடிக்கும் தண்ணீரில் இரண்டுவித இயல்புகளை பரிசோதனை செய்ய வேண்டும். தண்ணீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருட்களின் அளவு 40 முதல் 60க்குள் இருந்தால் நல்ல தண்ணீர். 51 என இருந்தால், சர்வதேச தரத்திற்கு இணையான குடிநீர் என்று அர்த்தம். 250 வரை இருந்தால் பரவாயில்லை. குடிக்கலாம் என்று சொல்வர். மற்றொன்று ?ஹட்ரஜனின் அளவு (பொட்டன்ஷியல்). 6.5 முதல் 7.5 வரை இருந்தால் அமிலமும், காரமும் அதிகமில்லாத நடுநிலை. 6.5க்கு கீழே இருந்தால் அமிலத்தன்மை உடையது. இத்தகைய தண்ணீரை தொடர்ந்து குடித்தால் அல்சர், வயிற்றுப் புண் ஏற்படும்.
8.5க்கு மேல் இருந்தால் தண்ணீர் காரத்தன்மை உடையது. இதைத் தொடர்ந்து குடித்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.'போர்வெல்' தண்ணீரில் 'ப்ளூரைடு' அதிகமாக இருந்தால், தொடர்ந்து குடிக்கும் போது, பற்கள் மஞ்சளாகும். இரும்பு அதிகமாக இருந்தால் ரத்தஓட்டம் பிரச்னையாகும்.'போர்வெல்' தண்ணீரை 'ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்' முறையில் சுத்திகரிக்கும் போது, 100 லிட்டர் தண்ணீரில் 30 லிட்டர் நல்ல தண்ணீர் கிடைக்கும். மீதியுள்ள 70 லிட்டர் தண்ணீர் கூடுதல் உப்புடன் பூமிக்குத் தான் செல்லும். இதனால் அப்பகுதியில் உள்ள தண்ணீரில் உப்பின் தன்மை தொடர்ந்து அதிகரிக்கத் தான் செய்யும்.கடைகளில் கிடைக்கும் 'மினரல் வாட்டரில்', தண்ணீரில் கரையும் திடப்பொருட்களின் அளவு வெறும் 26 தான். குறைந்தது 46 ஆக இருந்தால் தான், நல்லது. அதேபோல் பி.எச்., அளவும் ஆறுக்கு கீழே உள்ளது. இதனால் வயிறு, குடல்புண் ஏற்படலாம்.
எந்தத் தண்ணீரைத் தான் நம்பி குடிப்பது? இயற்கை கொடுத்த மழைநீரை ரோட்டில் வீணாக்கி விட்டு, காசு கொடுத்து கண்ட தண்ணீரை வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறோம். மழைநீரை ஐந்து வழிகளில் பிடிக்கலாம். மழை பெய்யும் போது திறந்த வெளியில் குடத்தை வைத்து பிடித்தால் அது சுத்தமான மழைநீர். அதில் கரையக்கூடிய திடப்பொருளின் அளவு 46, பி.எச்., அளவு மிகச்சரியாக 7 ஆக இருக்கும். இதுதான் அமிலம், காரமில்லாத நடுநிலைமை. இதுதான் குடிப்பதற்கு உகந்த தண்ணீர் என்று இயற்கை, நமக்கு மழைநீரை வழங்கிக் கொண்டிருக்கிறது.இரண்டாவது முறை, மொட்டைமாடியில் வழியில் மழைநீரை குழாய் மூலம் கீழ்நிலைத் தொட்டி, பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரிப்பது. இதில் தொட்டியின் பாதியளவு கூழாங்கற்கள், அடுப்புக்கரி, மணல், தேங்காய் சிரட்டை எரித்த கரியை நிரப்ப வேண்டும். மீதிப்பகுதியில் மழைநீர் சேகரமாகும். சுத்திகரிக்கப்பட்ட மழைநீரை கீழ்ப்பகுதியில் உள்ள திருகுகுழாய் மூலம் பாத்திரங்களில் சேகரிக்கலாம். ஏற்கனவே கட்டியுள்ள வீடுகளில், மிகச் சிக்கனமாக இம்முறையில் மழைநீரை சேகரிக்கலாம்.
அடுத்தது வீட்டின் பிறபகுதிகள், நடைபாதையில் சேகரமாகும் மழைநீரை தக்கவைக்க, மழைநீர் சேகரிப்பு பள்ளத்தை தோண்ட வேண்டும். இதில் பாதியளவு ஜல்லிகற்களை கொட்டி, மேற்பகுதியை மூடி காற்று வெளியேற சிறுகுழாயை செருக வேண்டும். மழைநீர் இப்பள்ளத்தில் நிறைந்து, பூமியை நோக்கிச் செல்லும். மழைநீர் நிலத்தடிக்குள் செல்லாத நிலையில் தான், கட்டடங்களில் விரிசல் ஏற்படுகிறது. வீட்டில் விரிசல் இருப்பதற்கு, நிலத்தடி நீர் சேகரிப்பு அவசியம். அதுமட்டுமின்றி, மண் அரிப்பையும் தடுப்பதோடு, 'போர்வெல்' நீரின் உப்புத்தன்மையை குறைக்கிறது.
எப்படி பரிசோதிப்பது?
தண்ணீரில் கரைந்துள்ள திடப்பொருளின் அளவை, 'டி.டி.எஸ்.,' மீட்டர் மூலம், ஒருசில வினாடிகளில் கண்டறியலாம். இந்த கருவியின் விலை ஆயிரம் ரூபாய். ஹட்ரஜன் பொட்டன்ஷியல் கண்டறிய ஒரு 'லிட்மஸ்' காகிதம் போதும். குடிநீரை காகிதத்தை நனைத்த 30 வினாடிகளில் மஞ்சள், பச்சை இரண்டு நிறத்திற்கு நடுவில் இருந்தால், அளவு சரியாக இருக்கிறது என்று அர்த்தம். நூறு காகிதம் அடங்கிய 'லிட்மஸ்' புத்தகம் விலை 100 ரூபாய்.
ஒரு வீட்டுக்கு 10 செ.மீ., மழை
நான்கு பேர் அடங்கிய ஒரு குடும்பத்திற்கு ஓராண்டிற்கு குடிக்க, சமைப்பதற்கு 11ஆயிரம் லிட்டர் மழைநீர் தேவை. மதுரையில் சராசரி மழைஅளவு 86 செ.மீ., ஆயிரம் சதுரடி மொட்டைமாடி இருந்தால், மொத்தம் 10 செ.மீ., மழையே போதும். ஒருமுறை மழை பெய்தால் குறைந்தது 10 மி.மீ., என்று வைத்துக் கொண்டாலும் ஆயிரம் லிட்டர் கிடைத்து விடும். இதில் நேரடியாக வெயில் படாமல் இருந்தால் ஆறுமாதங்கள் வரை பாதுகாக்கலாம். அதன்பின்னும் தண்ணீர் இருந்தால், ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் 'கெமிக்கல் ப்ளீச்' கலந்தால் போதும். மீண்டும் குடிக்க பயன்படுத்தலாம். 500 சதுர அடி மொட்டை மாடி இருந்தால் 20 செ.மீ., மழை தான் தேவை. ஒவ்வொரு வீட்டிலும் மிக எளிமையாக மழைநீரை சேமிக்கலாம். குடிதண்ணீருக்காக அரசையோ, தனியாரையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை.
- என்.அருணாச்சலம், 
சிறப்பு முதன்மை பொறியாளர் (ஓய்வு), பொதுப்பணித்துறை.
போன்: 94433 39951.

All food Business Operators of EKHills and WG Hills can apply online for certificate

Shillong, June 24: The Food Safety and Standards Act,2006 has been implemented throughout the country with effect from 5th August 2011, for laying down science based standart for articles of food and to regulate its manufacture, storage, Distribution sale and Import, to ensure availability of safe and wholesome food for human consumption and matter connected therewith.
Under the act rules and regulation it is mandatetory for all food business operafor (FBO) to obtain LicenseRegistration certificate. Food Safety and Standards Authority of India (FSSAI) has created a Centralized Online System for FBO – License, Registratbn for use across the country, with assistance from National Institute of Smart Government (NISG), Hyderabad.
The Commissioner of Food Safety, (Health & Family velfare Deptt) Government of Meghalaya, has adopted the centralized Online System of Licensing, Registration for Food Business Operators as a pilot project for the district ofEast Khasi Hills and West Garo Hills District from today the 24th June 2014.
All food Business Operators of East Khasi Hills and West Garo Hills Districts can now avail of the services for licensing, /Registration by logging onto the website: http:www.fssai.gov.in .This online FoodLicensingIRegistration System (FLRS) enables the Food Business Operators, at their comfort, to check for eligibility, apply for License/Registration, appropriate amount of fees to be paid, upload supporting documents, track the status of their applications, LicenseIRegistration status, and schedule of inspections and receive alerts on the status and renewals of License & Registration.
Food Business Operators may create their online user accounts and continue to receive SMS, e-mail alerts from the Authority. Manual applications will not be accepted by the authority from the Food Business Operators for License/Registration in the Districts of East Khasi Hills and West Garo Hills Districts from 24th June 2014 onwards.
All the Food Business Operators located in these Districts are requested to avail the online services and comply with the provisions of the Food Safety and Standards Act, 2006.

Unsafe beverages, banned tobacco products seized

TRICHY: A raid by officials of the food safetywing at shops around Chatram bus stand in thecity brought to light the sale of sub-standard cool drinks and buttermilk. The raid also yielded banned tobacco products from these shops.
A team of officials carried out the raid at around 50 shops around the stand which is the hub of buses proceeding to places on the outskirts of Trichy and also to neighbouring districts like Karur.
During the raid officials found 25 bottles of unbranded cool drinks and some packets of buttermilk. Both the items did not bear any name, date of manufacture, date of expiry and other required details.
"We conducted the check as part of regular inspections. We found cool drinks and buttermilkwhich did not have any information about their manufacturer. Vendors said that they don't know about the origin of such cool drinks. We seized the products," said Dr A Ramakrishnan, designated officer, food safety wing.
In Trichy, artificially flavoured juices are in great demand with mostly poor people consuming them. Shops selling such beverages are across the city, though concentrated in dense public placeslike the Central and Chatram bus stands.
Dr Ramakrishnan advised people to be careful while buying packed cool drinks. People should verify the dates of manufacture and expiry before consuming them to avoid any health complications, he said.
Officials are yet to ascertain the quality of the packs seized on Tuesday. Officials took samples of artificially flavoured juices from some shops. These samples will be sent for testing in government laboratory.
The officials warned vendors about penalties if sub-standard beverages are sold.
The raid also exposed the continuing sale of banned tobacco products in the city. The raiding parties seized some tobacco products from a few shops.

Awareness programme on modernization of meat shops

One day awareness programme on modernization of meat shops under the aegis of National Mission on Food Processing (NMFP) 2013-17 was organized by Department of Industries & Commerce in coordination with Health & Family Welfare, Urban development , veterinary & animal husbandry (V&AH) and Kohima Municipal council (KMC) at Zonal council hall here Tuesday.
OSD Industries & Commerce, B. Longkumer, who chaired the programme, in his opening remark, said the modernization of meat shops was very much required and relevant in Nagaland as Nagas were heavy meat eaters, adding that hygienic handling of meat and delivering to the consumers was very important. 
He said this government scheme would be first implemented in Kohima, Dimapur and Mokokchung and later to other parts of the state.
Longkumer said government would provide grant-in-aid to the slaughterhouse owner and real beneficiaries would be for the consumers as it concerned hygiene.
He urged the general public to check the proper implementation of the centre scheme in the state.
Industries & commerce deputy director Khrielie Peseyie said majority of the population in India consumed meat from the traditional meat shops where individual butchers slaughter sheep/goats for sale of meat in small quantities throughout the day. 
Highlighting objectives of the scheme, he said it was aimed at improving the overall hygiene in the meat shops by providing basic infrastructure and equipment and also ensure food safety rules and regulation compliances as per FSS Act 2006 and caters to public health concerns as a whole. 
He said modernization of meat shops would also help protect and sustain the livelihoods of people involved and it would improve the competitiveness in the supply of wholesale meat vis-à-vis the development of new retail chains.
Peseyie also highlighted the eligibility, receipts of applications, civil structure items, and ineligible civil works in machinery/equipment/mechanical items and pattern of release of grant. 
He said under this scheme, North East states including Nagaland, the quantum of assistance from the government would be 75% of the cost of machinery/equipment and technical civil works (TCW) and other eligible items.
FPI cell D.o.I & C Kuko Nuh highlighted prototypes of modernized meat shops, FPI cell D.o.I & C Mhasiphizo Khezhie spoke on machinery and equipments for modernized meat shops with power-point presentation, V&AH deputy director Dr. Hevito Shohe spoke on quality of livestock and meat establishment and maintenance of meat shops.
FSO Kohima Kezhangulie spoke on Food Safety and Standard Act (FSSA) 2006 its definition, standards, food regulatory authorities, licensing and registration and penalties.
Earlier, KMC administrator Lithrongla Tongpi delivered welcome address, interactive session was held with the participants and vote of thanks was proposed by Akhrie –a Mor member KCCI. 
Programme was attended by around 50 persons which included colony wards chairmen, GBs, NAYO, colony youth leaders, butchers union, KCCI, KMC, entrepreneurs and others.

கடலூர் பழக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


டலூர், ஜூன் 25:
கடலூரில் ரசாயன கல் மூலம் செயற்கை முறையில் பழ வகைகள் பழுக்க வைக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர்.
பழக்கடைகளில் விற்கப்படும் பழங்கள் வெப்ப நிலை காரணமாக வீணாகுவதை தடுக்க செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3 டன் மாம்பழம் கார்ப்பரேட் கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் நகரில் இது போன்று பல்வேறு பழக்கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையிலான அலுவலர்கள் பேருந்து நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பழக்கடைகள், குடோன்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சில கடைகளில் இருந்து பழங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது.

DINAMALAR NEWS


DINAMALAR NEWS


சோதனையில் பறிமுதல் செய்யப்படும் புகையிலை பொருட்கள் மீண்டும் அதே கடைகளுக்கு விற்பனை?


திருவள்ளூர், ஜூன் 25:
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான்பராக் போன்றவற்றை நகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் நகரில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான்பராக் போன்றவை தடையின்றி விற்கப்படுவதாக நகராட்சி ஆணையர் அட்சயாவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நகராட்சி சுகாதார அதிகாரிகள், நேற்று பஜார் வீதி, சி.வி.நாயுடு சாலை, மோதிலால் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த போதை வஸ்துகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்..
இப்படி, நகராட்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்து கொண்டு செல்லப்படும் பொருட்களை நகராட்சி ஊழியர்கள் முறைப்படி எரித்தோ அல்லது பூமிக்கடியில் புதைத்தோ அழிக்க வேண்டும். ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், இப்பொருட்களை மீண்டும் கடைகளுக்கு கொண்டு சென்று குறைந்த விலையில் விற்பதாக நகர மக்கள் கூறுகின்றனர்.
எனவே, பறிமுதல் செய்யப்படும் போதை பொருட்களை முறைப்படி அழிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Banned tobacco products seized

Officials conduct searches in bakeries and roadside shops
Stern action:Food safety officials seized banned tobacco products during searches in shops at Ganapathy in the city, on Tuesday
Food Safety Officials conducted raids atbakeries and roadside shops across the district on Tuesday as part of a drive against adulteratedtea powder and sale of banned tobacco products.
According to Tamil Nadu Food Safety and Drug Administration Department (Food Safety Wing), R. Kathiravan, 183 kilograms of banned tobacco products, valued at Rs. 55,000, were seized from the roadside shops.
Compost yard
They would be destroyed at the CorporationCompost Yard at Vellalore.
Around 50 kilograms of adulterated tea powder were also seized from the bakeries.
These seized products were immediately destroyed with the help of local bodies.
A total of 150 shops were inspected by six teams each comprising four food safety officers.
Inspection
Of the shops inspected, as many as 55 were found to be selling banned tobacco products.
Shops at Ganapathy, Gandhipuram, Perur, Kinathukadavu, Mettupalayam and Pollachi were inspected.
Dr. Kathiravan said that such action would continue as part of the Government’s drive against unsafe food and sale of banned tobacco products.

டெல்லியிலிருந்து சென்னைக்கு கடத்திய 15 லட்சம் புகையிலை பறிமுதல்


வண்ணாரப்பேட்டை, ஜூன் 25:
பேசின்பிரிட்ஜ் அருகே, வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டபோது, அதில் ஏராளமான பண்டல்கள் இருந்தன. அதுபற்றி கேட்டபோது பிஸ்கெட் பாக்கெட் என டிரைவர் தெரிவித்தார். சந்தேகத்தின் பேரில், போலீசார் ஒரு பண்டலை பிரித்து பார்த்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரிந்தது.
அனைத்து பண்டல்களையும் சோதனை செய்ததில், 4.5 டன் எடை கொண்ட புகையிலை இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு 15 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து, புகையிலையுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், டெல்லியை சேர்ந்த லாரி டிரைவர் சத்தம்லால் (30) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், டெல்லியில் இருந்து சவுகார்பேட்டையில் உள்ள ஒரு குடோனுக்கு இந்த புகையிலை பொருட்களை கொண்டு வந்தது தெரிந்தது. பறிமுதல் செய்த புகையிலையை, மாவட்ட உணவு பாதுகாப்பு ஆய்வாளர்களடம் போலீசார் ஒப்படைத்தனர். அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ராட்சத பள்ளம் தோண்டி அழித்தனர். பிடிபட்டுள்ள டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

DAILY THANTHI NEWS


சென்னையில் இருந்து சேலத்திற்கு.ரயிலில் பார்சலாக கடத்தி வந்த 1.20 லட்சம் குட்கா பறிமுதல்


சேலம், ஜூன் 25:
சென்னை யில் இருந்து சேலத்திற்கு ரயி லில் பார்சலில் கடத்தி வரப்பட்ட 1.20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்க வை ஆர்பிஎப் போலீ சார் பறிமுதல் செய்தனர். சிக்கிய வாலிபரிடம் தீவிர விசார ணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்பராக், குட்கா போன்றவை ஆங்கா ங்கே கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போதை புகையிலை பொரு ட்களை ஒரு கும்பல், ரயில்கள் மூலம் பார்சலில் முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வருவது கடந்த 3 மாதத்திற்கு முன்பு கண்டறியப்பட்டது. அப்போது சென்னையில் இருந்து கோவை மற்றும் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட் களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் சந்தேகப்படும்படி வரும் பார்சல் களை ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு நேற்று, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த 27 பண்டல்கள் மீது சந்தேகப்பட்டு பாதுகாப்பு படை யினர் தனியாக எடுத்து வைத்தனர். அந்த பண்டல்களை சோதனையிட்ட போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா இருந்தது தெரிந்தது.
இதையடுத்து அந்த பண்டல்களை எடுக்க வருபவரை பிடிக்க பாதுகாப்பு படையினர் தயாராக இருந்தனர். அப்போது சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து ராஜ் குமார் (45) என்பவர் பண்டல்களை எடுக்க வந் தார். அவரை இன்ஸ்பெக்டர் பொன்னு சாமி, காவலர்கள் சரவணன், தனசேகரன், லட்சுமிநாராயணன், ராதாமணி ஆகியோர் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரிடம் நடந்த விசாரணையில், சென்னை யில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களையும், பாக்குகளையும் மொத்தமாக தனது ஏஜென்சி பெயரில் அனுப்பி வைக்க கூறுவதும், அங்கிருந்து ஒரு கும்பல் மொத்தமாக அனுப்பி வைப்பது வாடிக்கையாக நடந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து 27 பண்டல்களையும் பறிமுதல் செய்து தனித்தனியாக சோதனையிட்டனர். அதில் 12 பண்டல்களில் போதை புகையிலையான குட்கா வும், மற்ற 15 பண்டல்களில் பாக்குகளும் இருந்தன. இதை பாதுகாப்பு படை உதவி கமிஷனர் கோவிந்தராஜூம் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.






இதையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர், அதிகாரிகளுடன் வந்து 1.20 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தார். இதுபற்றி நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், “போதை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. மற்ற பாக்குகளை திரும்ப ஒப்படைக்கிறோம். புகை யிலை பொருளை கடத்தி வந்தவர் மீது உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம்,“ என்றார்.

ஜங்ஷனில் பார்சல் மூலம் வந்த போதை வஸ்துகள் பறிமுதல்

சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு, பார்சல் மூலம் வந்த, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வெளி மாநிலங்களில் இருந்து ஏஜன்டுகள் மூலமாக, தொடர்ந்து போதை வஸ்துகள், தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார், 46. நேற்று இவர், ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் பிரிவு அலுவலகத்துக்கு வந்துள்ளார். கோவை எக்ஸ்பிரஸில், சென்னையில் இருந்து ராஜ்குமாருக்கு, கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்துள்ளது.
ராஜ்குமார் அந்த பார்சலை வாங்கியுள்ளார். அதில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் வந்திருப்பாக, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி, போலீஸார் தனசேகரன், சரவணன், ராஜாமணி உள்ளிட்டோர், ராஜ்குமாரிடம் இருந்து பார்சலை வாங்கி பிரித்துள்ளனர். அதில், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை வஸ்துக்கள் இருப்பது தெரிய வந்தது. ஆர்.பி.எஃப்., போலீஸார், போதை வஸ்துகளை பறிமுதல் செய்தனர்.
பிடிப்பட்ட ராஜ்குமார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டார். சென்னையில் இருந்து வந்த கூரியர் அலுவலகத்தில், அங்கிருந்து ராஜ்குமாருக்கு போதை வஸ்துகளை பார்சல் அனுப்பியவர் யார் என்பது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Sago unit sealed

Officials sealed a sago unit functioning at Nattamangalam in Ayothiyapattinam block on Tuesday after the unit was found to be using banned chemicals for whitening tapioca starch.
During an inspection by a team led by T. Anuradha, District Designated Officer, Tamil Nadu Food Safety and Drug Administration Department, it was found that wet tapioca starch was being purchased from a supplier in Attur, and was mixed with chalk powder, rice flour, and maize starch.
They found that 660 litres of bleaching liquids, and 90 litres of sulphuric acid were being used to whiten the starch.
Officials destroyed the chemicals, and took samples of the product for laboratory test.

கல்மாவு, ஈரமாவு சேர்த்து உற்பத்தி: மேலும் ஒரு ஜவ்வரிசி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அதிரடி நடவடிக்கை

சேலம், ஜூன்.25-
கல்மாவு, ஈரமாவு சேர்த்து ஜவ்வரிசி உற்பத்தி செய்த மேலும் ஒரு ஜவ்வரிசி ஆலைக்கு ‘சீல்‘ வைத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
ஜவ்வரிசி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ஜவ்வரிசி ஆலையில் கடந்த 20-ந் தேதி, சேலம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது மரவள்ளிகிழங்கு மாவில் ரசாயன பவுடர் மற்றும் மக்காச்சோள மாவு கலந்து ஜவ்வரிசி தயாரிப்பது கண்டறியப்பட்டது. மேலும் அந்த ஆலை உரிமம் பெறாமல் நடத்தப்பட்டதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அந்த ஆலைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. இதை கண்டிக்கிற வகையில் நேற்று முன்தினம், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவை, ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். சீல் வைக்கப்பட்ட ஆலையை திறக்க வேண்டும் என்றும், ஜவ்வரிசி ஆலையில் சுகாதாரமான முறையில் ஜவ்வரிசி தயாரிக்கப்படும் என்ற உறுதியையும் அளித்தனர்.
மீண்டும் ஆய்வு
இந்த நிலையில் நேற்று சேலம் அருகே உள்ள அக்ரஹார நாட்டார்மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஜவ்வரிசி ஆலையில், கலப்படம் செய்து உற்பத்தி செய்வதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அது தொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் குமார்ஜெயந்த் உத்தரவையும், மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் அனுமதியையும் பெற்ற டாக்டர் அனுராதா, கலப்படம் நடப்பதாக கூறப்பட்ட ஆலைக்கு விரைந்து சென்றார்.
அப்போது ஜவ்வரிசி ஆலைக்குள் தலா 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட 11 கேன்களில் சோடியம் ஹைபோ-குளோரைடும், 2 கேன்களில் சல்பியூரிக் அமிலமும் இருந்தது. மேலும் ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதற்காக மரவள்ளிகிழங்கை தோல் உரிக்காமல் அரைத்து வைத்த ஈரமாவு, கல்மாவு(சாக்பீஸ் தயாரிக்கும் மாவு) மற்றும் மக்காச்சோளமாவும் இருந்தது. இந்த ஆலைக்கு பெயர் ஸ்ரீஹரி சேகோபேக்டரி என்பதும், அதன் உரிமையாளர் சேல த்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பதும் தெரியவந்தது.
2 புரோக்கர்கள்
இந்த ஆலைக்கு, சேலத்தை சேர்ந்த ஜெகன், ஆத்தூரை சேர்ந்த ஜெகநாதன் ஆகிய இருவரும் புரோக்கர்களாக செயல்பட்டு ஈரமாவு, கல்மாவு ஆகியவற்றை சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதுபோல சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலைகளுக்கும் இருவரும் சப்ளை செய்துள்ளனர்.
ஈரமாவு, கல்மாவு, மக்காச்சோள மாவு கலந்து ஜவ்வரிசி தயாரிப்பதால், எடை அதிகரிக்கும் திட்டத்துடன் இதை ஆலை உரிமையாளர் செய்திருப்பதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஆலையில் வைக்கப்பட்டிருந்த 13 கேன்களில் உள்ள அமிலம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
ஆலை ‘சீல்‘ வைப்பு
மேலும் ஆலையில் உள்ள ஜவ்வரிசி மாதிரி சேகரிக்கப்பட்டு, அதை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோன்று மீண்டும் ஜவ்வரிசி ஆலை செயல்படாமல் இருக்கும் வகையில் டாக்டர் அனுராதா அந்த ஆலையை பூட்டி ‘சீல்‘ வைத்தார்.
தொடர்ந்து ஜவ்வரிசி ஆலைகள் சோதனை நடத்தப்படும் என்றும், அங்கு கலப்படம் மற்றும் முறைகேடு ஏதேனும் நடப்பது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் டாக்டர் அனுராதா தெரிவித்தார். 

உணவு பாதுகாப்பு துறை அதிரடி சேலத்தில் மீண்டும் ஒரு சேகோ ஆலைக்கு சீல் ஆலை உரிமையாளர்கள் பீதி


சேலம், ஜூன் 25:
சேலத்தில் மீண்டும் ஒரு சேகோ ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம், ஆலை உரிமையாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜவ்வரிசி தயாரிப்பில் சேலம் மாவட்டம் முன்னணி இடம் வகிக்கிறது. மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆனால் சமீப காலமாக சேகோ ஆலைகளில் ஜவ்வரிசி தயாரிப்பில் ரசாயன பொருட்களை பயன்படுத்துவதாகவும், விலை குறைந்த மக்காச்சோள மாவு கலப்படம் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் முத்தரப்பு கூட்டம், ஜாகீர்ரெட்டிப்பட்டியில் ஒரு சேகோ ஆலைக்கு சீல் என மாவட்ட நிர்வாகம் சுறுசுறுப்பாக செயல்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் சேலம் தாலுக்கா ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஜாகீர்ரெட்டிப்பட்டியில் சேகோ ஆலைக்கு சீல் வைத்த, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சீல் வைக்கப்பட்ட ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சேலத்தில் நேற்று, மீண்டும் ஒரு சேகோ ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும், சேகோ ஆலை உரிமையாளர்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் அக்ரஹார நாட்டார்மங்கலம் பகுதியில் வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான சேகோ ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான குழுவினர், நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், ஆலையில் ஜவ்வரிசி தயாரிக்க சோடியம் ஹைபோ குளோரைடு மற்றும் சல்பியூரிக் ஆசிட் போன்றவற்றை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் மற்றும் அமிலங்களை பயன்படுத்தியதால், அதிகாரிகள் ஆலையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கு இருந்த ரசாயன பொருட்களும் அழிக்கப்பட்டன.
சோதனையின் போது, ஆலை உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும் தெரியவந்தது. மேலும் ஆலை உரிமையாளரான வெங்கடாசலம், சேலத்தை சேர்ந்த ஜெகன் மற்றும் ஆத்துரை சேர்ந்த ஜெகன்நாதன் என்ற புரோக்கர்களின் மூலமாக அரைக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு மாவை ஆத்தூரில் இருந்து வாங்கி, ஜவ்வரிசி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இது குறித்து டாக்டர் அனுராதா கூறுகையில், மரவள்ளிக்கிழங்கை அரைப்பதற்கான வசதி இல்லாத சில ஆலை உரிமையாளர்கள், அரைக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு மாவை வெளியில் இருந்து பெற்று ஜவ்வரிசி தயாரித்து வருகின்றனர். இதில், மக்காச்சோள மாவு, அரிசி மாவு, சாக்பீஸ் மாவு போன்றவை கலக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் சேகோ ஆலைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது இந்த ஆலையில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு, சேலம் உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்தின் சோதனைக்கான அனுப்பப்பட்டுள்ளது. இந்த முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஈரமாவு வாங்கி ஜவ்வரிசி தயாரிப்பு மேலும் ஒரு சேகோ ஆலைக்கு "சீல்'

சேலம்: அயோத்தியாபட்டணம் அருகே, ஈரமாவை வாங்கி வந்து, கெமிக்கல் கலந்து ஜவ்வரிசி தயாரித்த, சேகோ ஆலைக்கு, உணவு பாதுகாப்பு அதிகாரி சீல் வைத்தார்.
சேலம் மாவட்டத்தில், 250க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் உள்ளன. இங்கு, ஸ்டார்ச் மாவு, ஜவ்வரிசி உள்ளிட்டவை தயாரிக்கின்றனர். மரவள்ளி கிழங்கின் தோலில், விஷத்தன்மை அதிகம் கலந்துள்ளதால், அவற்றை நீக்கி விட்டு, ஜவ்வரிசி உற்பத்தி செய்ய வேண்டும். வெளிர்நிறத்துக்காக, கெமிக்கல் அதிகம் கலப்பதும் நடந்து வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு செய்து எச்சரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டியில் உள்ள அம்மன் சேகோ ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், ஈரமாவை வாங்கி வந்து, அதில் கெமிக்கல் கலந்து ஜவ்வரிசி தயாரிப்பதாக, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவுக்கு புகார் வந்தது. அதனடிப்படையில், அயோத்தியாபட்டணத்தை அடுத்த, அக்ரஹாரநாட்டாமங்கலத்தில், ஸ்ரீஹரி சேகோ ஆலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆத்தூரில் இருந்து ஈரமாவு வாங்கி வந்து பயன்படுத்தியது தெரியவந்தது. அதற்கான எந்த ஆவணமும் இல்லை.
ஈரமாவில், கல்மாவு, அரிசிமாவு, மக்காச்சோள மாவு பயன்படுத்துகின்றனர். ஹரி சேகோ ஆலையில், 600 லிட்டர் சோடியம் ஹைபோ குளோரைடு, 45 லிட்டர், சல்பரி ஆசிட் இருந்தது கண்டறியப்பட்டது. ஜவ்வரிசியும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கெமிக்கல் பயன்படுத்தி வருவது தெரியவந்ததால், அந்நிறுவனத்துக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.
""கெமிக்கல் கலந்திருப்பது தெரியும்பட்சத்தில், சம்மந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர் வெங்கடாசலம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறினார்.