Oct 10, 2014

State FDAs launch drives to check adulteration prior to festive season

The food and drug administrations of a few states launched drives to curb adulteration, a rampant practice during the festive season. Food and Drug Administration (FDA) Maharashtra conducted raids, and seized about 6,000kg of spurious mawa a few days prior to Ganesh Chaturthi and Durga Puja.
When quizzed about the raid and seizure of adulterated mawa, Amit Deshmukh, Maharashtra’s minister of state for food and drug administration, said, “In view of the festive season, FDA Maharashtra started conducted the raids in August 2014, and has so far seized mawa worth Rs 13.49 lakh from across the state.”
“By mid-September, the state FDA had collected about 66 samples and sent them for testing. We are awaiting the reports. After the crackdown on adulterated mawa, we directed the state FDA to continue conducting raids until Christmas,” he added, urging people to take precautions while buying sweets or mawa during the festive season.
Deshmukh said, “We appeal to the people to buy only the amount of sweets or mawa that is required during the festive season, and keep the same refrigerated. If people find anything amiss in the sweets they buy or consume, they should approach FDA Maharashtra at the earliest.”
Gujarat
H G Koshia, commissioner, Food and Drugs Control Administration, Gujarat, said, “The use of adulterated mawa to make sweets is on the rise during the festive season. However, in Gujarat, we are conducting a special drive to check adulteration. We have deployed over 300 food safety officers (FSO) for the purpose.”
“However, of all the samples tested in Gujarat, only four per cent were found to be adulterated. Hence, the quality of food prepared in the state is better than most other states in the country,” he added.
Assam
L R Nampui, joint commissioner, commissionerate of food safety, Assam, said, “Before the festive season, we planned to launch a drive against food adulteration. It is a fact that the mawa and milk used to make sweets during the festive season are adulterated, because at this time, the demand for certain items increases, but its supply is limited.”
“Our officials would be collecting samples of ghee, oil, mawa, sweets and paneer, and sending these to the laboratory for testing. During Diwali, the demand for milk increases, and our officials would be keeping tabs on its supply, because the chances of adulteration are brighter. Sub-standard and adulterated food items could cause stomach ailments,” he added.
“The Food Safety and Standards Regulations (FSSR), 2011, defined unsafe food as an article whose nature, substance or quality is so affected as to render it injurious to health,” Nampui said.
He added, “The laws are stricter now, and those involved in adulteration would be punished. Anyone found manufacturing, selling or storing such unsafe foods would be liable to pay a penalty ranging between Rs 1 lakh and Rs 10 lakh, and sentenced to imprisonment for a term ranging between six months and life.”

UT ADMIN CRACKS DOWN ON FOOD ADULTERATION

Gearing up to prevent food adulteration during this festive season, the UT Administration has begun an intensive checking drive in the Union Territory of Chandigarh.
A team of the UT Food Safety & Standards Authority, UT Health Department has been constituted to conduct preventive checks in the city.During Thursday’s inspection across the city, about 200 kgs of Matthi, Cream Rolls, Balu Shahi, Cream, Vanaspati Ghee and Maida which were kept exposed to dust and flies and were unfit for human consumption were destroyed under Epidemic Diseases Act in the city.
A spokesperson of the UT Administration said that a joint team comprising food safety officers Bharat Kanojia and Surinder Pal Singh conducted a raid on October 9 under the supervision of Dr KS Rana, designated officer in view of the ongoing festive season to check the purity of sweets and khoya products in Chandigarh.
The team inspected the areas of Sector 14, Manimajra, Pipliwala Town, Gobindpura, Indira Colony, Shanti Nagar and the area around the Railway Phatak, said the spokesperson.After inspection, the team took four samples of Khoya, Besan Laddoo, Gulab Jamun and Rasgulla Sweets.
The spokesperson said that the Administration has already issued warning to shopkeepers and vendors to refrain from activities like food adulteration. If any shopkeeper or vendor is found selling adulterated food, strict action will be taken against them under Food Safety and Standards Act, 2006 and under Section 2 of the epidemic diseases Act 1897 (Central Act No.III of 1897).
The UT Administration has also directed all food business operators to maintain proper hygiene of their premises while preparing and selling of sweet meals.

Health Dept destroys 200 kg of sweets

Chandigarh, October 9
A team of the UT Health Department took four samples of sweets and destroyed 200 kg of sweets found exposed to flies and dust.
Following directions issued by the Additional Secretary (Health), a joint team, comprising food safety officers Bharat Kanojia and Surinder Pal Singh, conducted a raid under the supervision of Dr KS Rana, designated officer, in view of the ongoing festive season to check the purity of sweets and “khoya” products.
The team inspected areas in Sector 14, Mani Majra, Pipliwala town, Gobindpura, Indira Colony, Shanti Nagar and the railway crossing. Food vendors were instructed to maintain hygiene and ensure quality standards as stipulated in the Food Safety and Standards Act, 2006. The team took four samples, one each of khoya, besan ladoo, gulab jamun and rasgulla. A total of 200 kg of matthi, cream rolls, balushahi, cream, vanaspati ghee and maida, which were exposed to dust and flies and found unfit for human consumption, were destroyed under the Epidemic Diseases Act.

Punjab progressive farmers moot milk ATMs in Ludhiana

The ATMs would function round the clock, which would allow residents of the city to have access to milk
Ludhiana-based Progressive Dairy Solutions (PDS), incorporated by progressive dairy farmers of Punjab, is planning to introduce milk ATMs in Ludhiana.
The ATMs would function round the clock, which would allow residents of the city to have access to milk. If it happens,Ludhiana would be the first city in Punjab to have milk ATMs. The company has similar plans for Chandigarh also. Currently, the company is processing around 20,000 litres a day and marketing their milk under the brand La Pure in Ludhiana and Jalandhar.
"It is a quick and efficient system of distribution. Initially, we would introduce around 15 ATMs in a fortnight in Ludhiana. Each ATM will have a 500-litre dispenser and would be located in different parts of the city. This will prove to be especially useful for working women, and also to people who work long hours during the day and return late at night, not leaving them with enough time to go and purchase their daily requirements such as milk. The milk will be kept in refrigerators at four degrees Celsius to ensure that it remains fresh and does not spoil or curdle," Munish Sharma, general manager of Progressive Dairy Solutions, told Business Standard.
According to a national survey conducted by the Food Safety Standards Authority of India (FSSAI), a major portion of the milk samples in Ludhiana have been found to be non-compliant with FSSAI norms, as they were found to be adulterated with skimmed milk powder, glucose and water. Other adulterants that are used are urea, detergents, hydrogen peroxide and other carbonates and bicarbonates are added to milk.

உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி சேகோ உற்பத்திக்கு தடை, நோட்டீஸ்

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, சேகோ ஃபேக்டரியில், ரசாயன அமிலம் கலந்து, ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி செய்ததால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, சேகோ உற்பத்திக்கு தடை செய்து, "நோட்டீஸ்' வழங்கினார்.
ஆத்தூர் நகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள, இனிப்பு, காரவகைகள் தயாரிக்கும் தொழிற்கூடம், ஸ்வீட் கடைகளில், நேற்று, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, டாக்டர் அனுராதா தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் புஷ்பராஜ், சுந்தர்ராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்டோர், ஆய்வு செய்தனர். அப்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்வீட், மிக்ஸர் உள்ளிட்ட இனிப்பு, கார வகை தயார் செய்யும், 20க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்களில், சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் தயார் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தினர்.
தாண்டவராயபுரம் கிராமத்தை சேர்ந்த, பச்சமுத்து என்பவரது, எஸ்.எஸ்., சேகோ ஃபேக்டரியில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஸ்டார்ச் மாவு, உற்பத்தி செய்து வைத்திருந்த ஜவ்வரிசியில், ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது.
மேலும், இரண்டு லிட்டர், சல்ப்யூரிக் அமிலத்தை கண்டறிந்து, அவற்றை அழித்தனர். சேகோ உற்பத்தியில், ரசாயனம் கலந்துள்ளது கண்டறியப்பட்டதால், சேகோ உற்பத்திக்கு தடை செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் அனுராதா, "நோட்டீஸ்' வழங்கினார். ஜவ்வரிசி "மாதிரி' எடுத்து, உணவு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
நரசிங்கபுரம் நகராட்சி, விநாயகபுரத்தில் உள்ள, முருகன் சேகோ ஃபேக்டரியில், ஜவ்வரிசி மாதிரி எடுத்துச் சென்றனர். ஜவ்வரிசியில் கலப்படம் இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா எச்சரிக்கை விடுத்தார்

அதிகாரிகள் அதிரடி ஆத்தூர் அருகே சோதனைஅதிமுக பிரமுகர் ஆலையில் ஜவ்வரிசி உற்பத்திக்கு தடை


ஆத்தூர், அக்.10:
ஆத்தூர் அருகே அதிமுக பிரமுகர் ஆலையில் ஜவ்வரிசி உற்பத்திக்கு அதிகாரிகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில் அதிமுக பிரமுகர் பச்சமுத்து என்பவருக்கு சொந் தமான சோகோ ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனு ராதா தலைமையிலான அலுவலர்கள் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு ரசாயனம் கலந்த ஜவ்வரிசி மாவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு தடை சட்டம் 55ன் கீழ் சேகோ ஆலையின் உரிமையாளர்கள் பச்சமுத்துவுக்கு ஜவ்வரிசி தயாரிப்பதை நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


பண்டிகை காலங்களில்உணவு பாதுகாப்பு துறை பதிவுபெற்ற நிறுவன பலகாரங்களை வாங்குங்கள் கலெக்டர் அறிவுறுத்தல்



தூத்துக்குடி, அக்.10:
பண்டிகை காலங்களில் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் பலகாரங்கள் வாங்குமாறு பொதுமக்களுக்கு கலெக்டர் ரவிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் அனைத்து விதமான விற்பனைகளும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்குவதுடன், உறவினர்களுக்கும் வழங்குவதுண்டு.
ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களால் சுகாதாரமாக தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
கலப்படமான பொருட்களையோ, அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.
பேக்கிங் உணவு பொருட்களின் விபரச்சீட்டில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு, பேக்கிங் தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
உணவு பொருட்களை ஈக்கள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெறஅறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்களும் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் வாங்குமாறும், பேக்கிங் பொருட்களில் விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுதொடர்பான புகார்களை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலரிடம் 0461&2340699 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.

தடையை மீறி குட்கா விற்பனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கரூர், அக்.9:
தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள எதிர்பார்க்கின்றனர்.
பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. பொதுமக்களின் நலன்கருதி, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் சட்டத்தின்கீழ் புகையிலை மற்றும் நிகோடின் கலந்த பொருட்கள் விற்பனை செய்ய கரூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது.
நிகோடின் கலந்த பொருட்களை மக்கள் உட்கொள்வதால் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு இளம்வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் வாயின்உட்பகுதி உதட்டுபாகம், தாடை, நாக்கு, தோல் புற்றுநோய் ஏற்பட்டு மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நிகோடின், புகையிலை கலந்து தயாரிக்கப்படும் பான்மசாலா குட்கா, மாணிக்சந்த், பான்பராக், ஹான்ஸ், மாவா, தம்மக், கணேஷ், பாஸ்பாஸ் மற்றும் பீடா போன்றவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தடையை மீறி இந்த பொருட்கள் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது. வாகன ஓட்டிகள், பயணிகள் என பொது இடங்களில் இவற்றை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பான்பராக் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


அம்பை பகுதிகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்


அம்பை, அக். 9:
அம்பை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் ஒன்றியப்பகுதிகளான மன்னார்கோவில், வாகைக்குளம், காக்கநல்லூர் போன்ற பகுதிகளில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் குமார்ஜெயந்த் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி கருணாகரன் ஆகியோர் அறிவுரையின்பேரில் அம்பை உணவுப் பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் சோதனை யில் ஈடுபட்டார்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்பராக், புகையிலை மற்றும் தயாரிப்புத் தொடர்பான விவரங் கள் இல்லாத குளிர்பான பாக்கெட்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்தார்.
இதுபோல் மீண்டும் விற்பனை செய்தால் உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளிடம் எச்சரிக்கை விடுத் தார்.