Jun 25, 2014

தூத்துக்குடியில் அதிர்ச்சி சாயன ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்படும் வாழை பழங்கள்

தூத்துக்குடி, ஜூன் 25:
ரசாயன கலவைகளால் பழுக்க வைக்கப்பட்ட வாழை, மாம்பழங்கள் தூத்துக்குடியில் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது மாம்பழ சீசன் நடந்து வருகிறது. தற்போதுள்ள அவசர காலத்தில், மாம்பழங்கள் ரசாயன கல்லான கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறது. இந்த கல்லானது மாங்காய்களை கூட எளிதில் பழமாக்கி விடுகின்றன. கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை வாங்கி உண்பவர்கள்வயிற்றுக் கோளாறு நோய்களுக்கு உள்ளாகின்றனர்.
மாம்பழ சீசன் காலங்களில் உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகள்பழக்கடைகளில் திடீர் சோதனை நடத்தி கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்து விடுகின்றனர். ஆயினும், இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. வியாபாரிகளின் சுயநல நோக்கத்தினால் பழத்தை வாங்கி உண்ணும் அப்பாவிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இந்நிலையில், மாம்பழங்கள் போக தூத்துக்குடி பகுதிகளில் வாழைப் பழங்கள்கூட ரசாயன மருந்து தெளிக்கப்பட்டு பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மார்க்கெட் மற்றும் சில பழக்கடைகளில் வாழைக்காய்கள் ரசாயன மருந்து ஸ்பிரே மூலமாக பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழங்களை வாங்கி உண்பவர்கள் வயிற்று வலி, வயிற்றுக் கோளாறு போன்ற நோய் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.
எனவே உணவு கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்ட பழங்களின் சீசன் காலங்களில் மட்டும் அல்லாது இதர சமயங்களிலும் அனைத்து பழக் கடைகளில் சோத னை மேற்கொள்ள வேண் டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment