Jun 25, 2014

காலாவதி குளிர்பானம் அழிக்க ஏற்பாடு


கோவை, ஜூன் 25: கோவை வாலாங்குளம் பாலத்தின் கீழ் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை அழிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கோவை வாலாங்குளம் பாலத்தின் அடியில் 2011ம் ஆண்டு காலாவதியான குளிர்பான பாட்டில்கள் கொட்டப்பட்டு கிடந்தன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு 180 மில்லி பிடிக்க கூடிய மாம்பழ குளிர்பானங்களை மர்ம நபர்கள் வேன் அல்லது லாரி மூலமாக கொண்டு வந்து கொட்டி சென்றனர். சிறுவர்கள் அப்பகுதிக்கு விளையாட செல்லும் போது அந்த குளிர்பானத்தை குடித்தால் நோய் ஏற்படும் அபாயம் இருந்ததால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலாவதியான குளிர்பான பாட்டில்களை உடனடியாக கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருணா கூறுகையில், “தற்போது காலாவதியான குளிர்பான பாட்டில்கள் உணவுக் கடத்தல் பிரிவு அலுவலரிடம் சாம்பிள் எடுக்கும் பணிக்காக வழங்கப்பட்டுள்ளன.
அதற்கு பிறகு பாதுகாப்பான முறையில் அவை கொட்டி அழிக்கப்படும். காலாவதியான குளிர்பானங்களை கொட்டி சென்ற மர்ம நபர்கள் மீத சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment