Sep 19, 2014

வெல்லத்தில் கலப்படம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை பாயும் உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி

பரமத்திவேலூர், செப்.19:
வெல்லத்தில் கலப்படம் செய்தால் கடுமையான குற்ற வியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மா வட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வெல்ல மண்டிகள், வெல்ல உற்பத்தியாளர்கள், வெல்லமண்டி கடைக்காரர்கள் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களை உணவு பாதுகாப்பு துறை யினர் ஆய்வு செய்ய மா வட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவு படி மாவட்ட உணவு பாது காப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவசண்முகம், சிவநேசன், இளங்கோவன், பாலு மற்றும் முத்துசாமி ஆகியோர் கபிலர்மலை மற்றும் பிலிக்கல்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வெல்ல மண்டிகள், தனியார் தயாரி ப்பு கூடங்களில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, வெல்லத்தை வெண்மையாக்கும் பொ ருட்டு வெல்லப்பாகு கொதி நிலையில் வரும் போது சர்க்கரை (ஆஸ்கா) கலந்துள்ளதா என ஆய்வு செய் தனர். ஆய்வு மாதிரி உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் வெல்லத்தில் எவ்வித கலப்படம் செய்யக்கூடாது, வெல்லத்தை வெல்ல மண்டிக் கடைக்காரர்களோ அல்லது வியாபாரிகளோ அல்லது வெல்ல வியாபாரிகளோ வாங்கி விற்பனை செய்யக்கூடாது என ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வெல்லத்தில் கலப்படம் செய்தால், அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment