Sep 2, 2016

மாந்தோப்பில் ரகசிய பான் தொழிற்சாலை..! திடுக் ஆய்வு

தருமபுரி : தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்துள்ள முதலைப்பட்டி எனும் கிராமத்தில் மாந்தோப்பிற்குள் ரகசியமாக செயல்பட்டுவந்த பான், குட்கா தொழிற்சாலையை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்தனர்.
முதலைப்பட்டி கிராமத்தில் மாந்தோப்பில் பான் மற்றும் குட்கா பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ரகசியமாக செயல்பட்டு வருவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளும்படி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் பிருந்தாவுக்கு கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார்.
கலெக்டர் உத்தரவின் பேரில் மருத்துவர் பிருந்தா, உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் கோபிநாத், நாகராஜ், குமணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முதலைப்பட்டி கிராமத்திற்கு விரைந்து சோதனை நடத்தினர். சோதனையில் அந்த அங்கு ரகசிய ஆலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த சுமார் 60 லட்சம் மதிப்புள்ள பான் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், பான் பொருட்கள் உற்பத்திக்கும், பேக்கிங் பணிக்கும் பயன்படுத்தி வந்த இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. ரகசியமாக மாந்தோப்பில் செயல்பட்ட ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அதிகாரி பிருந்தாவிடம் பேசினோம்" கடந்த ஒரு மாத காலமாகத்தான் இந்த ஆலை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எந்தவிதமான உரிமமும் பெறவில்லை. இந்த ஆலையின் உரிமையாளர் யார் என்ற விபரமும் தெரியவில்லை. நாங்கள் ஆய்வுக்கு சென்றபோது அங்கு பீகார் தொழிலாளர்கள்தான் இருந்தார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

No comments:

Post a Comment