Nov 7, 2014

உணவு பொருள் சட்டம் வாபஸ் புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு பிரதமர், அமைச்சருக்கு பாராட்டு


 
புதுச்சேரி, நவ. 7:
புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் சிவசங்கர் தலைமையில் நேற்று மாலை நடந்தது. பொதுச்செயலாளர் பாலு, பொருளாளர் தங்கமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உணவு தொழிலில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான சிறு, நடுத்தர வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட உணவுப் பொருள் மற்றும் பாதுகாப்பு சட்டத்தை வாபஸ் பெற்று, அதில் தேவையான மாற்றங்கள் செய்து அமல்படுத்தக் கோரி புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய வணிகர்களின் பேரமைப்பு போராடி வந்தது.
இச்சட்டம் அமலா னால் கீரை விற்பவர் முதல் டீக்கடைக்காரர், உணவக உரிமையாளர், பேக்கரி உரிமையாளர் என கோடிக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். சோதனை என்ற பெயரால் அதிகாரிகளின் மிரட்டல், அத்துமீறல் அதிகமாகும்.
இச்சட்டத்தின்படி ரூ.5 ஆயிரம் கட்டி பதிய வேண்டும். இல்லாவிட்டால், ரூ.5 லட்சம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை எனது தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து முறையிட்டனர்.
இதன் விளைவாக, இச்சட்டத்தை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடி, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோருக்கும், எங்களோடு தோளோடு தோள் நின்று போராடிய அகில இந்திய பேரமைப்பு தலைவர்கள் மகேந்திரஷா, பார்தியா, பிரவீன் கண்டேல்பால், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் அனைத்து வணிக சங்க தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment